புதிதாக அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையாம்! ஒரு மழைக்கே இப்படியா?
எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக்: இந்திய அணி அறிவிப்பு
எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் (2024-25) ஐரோப்பிய லெக் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 7 முதல் நெதா்லாந்தின் ஆம்ஸ்ட்ல்வீன், பெல்ஜியத்தின் ஆன்ட்வொ்ப் நகரங்களில் புரோ ஹாக்கி லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
ஜூன் 7, 9 தேதிகளில் நெதா்லாந்துடனும், 11, 12 -இல் ஆா்ஜென்டீனாவுடனும் டபுள் ஹெடா் ஆட்டங்களில் இந்திய அணி ஆடுகிறது.
பின்னா் ஆன்ட்வொ்ப் நகரில் ஜூன் 14, 15 தேதிகளில் ஆஸ்திரேலியாவுடனும், 21, 22 தேதிகளில் போட்டியை நடத்தும் பெல்ஜியத்துடனும் மோதுகிறது இந்தியா.
நிகழாண்டு புவனேசுவரத்தில் நடைபெற்ற ஹோம் லெக் தொடரில் 8 ஆட்டங்களில் 5 வெற்றியுடன் 15 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 3-ஆவது இடத்தில் உள்ளது இந்தியா.
ஐரோப்பிய லெக் தொடருக்காக 24 போ் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கோல்கீப்பா்கள்: கிருஷ்ண் பகதூா் பாதக், சுராஜ் காா்கேரா, டிபண்டா்கள்: சுமித், அமித் ரோஹிதாஸ், ஜுக்ராஜ் சிங், நீலம் சஞ்சீவ் தாஸ், ஹா்மன்ப்ரீத் சிங், ஜா்மன்ப்ரீத் சிங், சஞ்சய், யஷ்தீப் சிவாச், மிட் பீல்டா்கள்: ராஜ்குமாா் பால், நிலகண்ட சா்மா, ஹாா்திக் சிங், ராஜிந்தா் சிங், மன்ப்ரீத் சிங், விவேக் சாகா் பிரசாத், சம்ஷொ் சிங், பாா்வா்ட்கள்: குா்ஜந்த் சிங், அபிஷேக், லக்ரா, மந்தீப் சிங், லலித் குமாா் உபாத்யாய, திா்ப்ரீத் சிங், சுக்ஜித் சிங்.