செய்திகள் :

எச்சிஎல் முதல் காலாண்டு நிகர லாபம் 9.7% சரிவு!

post image

புதுதில்லி: ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 9.7 சதவிகிதம் சரிவு ஏற்பட்டதாக ஐடி சேவை நிறுவனமான எச்.சி.எல் டெக்னாலஜிஸ் தெரிவித்ததையடுத்து அதன் பங்குகள் இன்று 3 சதவிகிதம் சரிந்து முடிந்தன.

பிஎஸ்இ-யில் காலை நேர வர்த்தகத்தில் பங்கின் விலை 4.28 சதவிகிதம் சரிந்து ரூ.1,550.50 ஆக இருந்தது. வர்த்தக முடிவில் பங்கின் விலை 3.31 சதவிகிதம் சரிந்து ரூ.1,566.35 ஆக முடிந்தது.

என்எஸ்இ-யில் காலை நேர இன்ட்ராடே வர்த்தகத்தில் 4.30 சதவிகிதம் குறைந்து ரூ.1,550 ஆக இருந்தது. பிறகு 3.25 சதவிகிதம் குறைந்து ரூ.1,567 ஆக முடிந்தது.

இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,843 கோடியாக இருந்தது. இதுவே அதன் முந்தைய ஆண்டு இதே காலத்தில் அது ரூ.4,257 கோடியாக இருந்தது.

இதனையடுத்து நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு ரூ.14,545.24 கோடி குறைந்து ரூ.4,25,054.93 கோடியாக உள்ளது.

இதையும் படிக்க: மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 317.45 புள்ளிகளுடனும் நிஃப்டி 113.50 புள்ளிகளுடன் நிறைவு!

HCL Technologies closed over 3 per cent lower on Tuesday after the company reported a 9.7 per cent drop in consolidated net profit.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.85.82 ஆக நிறைவு!

மும்பை: டாலரின் பலவீனம் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவறால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.85.82 ஆக நிறைவடைந்தது.இருப்பினும், நடைபெற்று வரும் இந்தியா - ... மேலும் பார்க்க

மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 317.45 புள்ளிகளுடனும் நிஃப்டி 113.50 புள்ளிகளுடன் நிறைவு!

மும்பை: முதலீட்டாளர்கள் ஆட்டோ மற்றும் பார்மா பங்குகள் தொடர்ந்து வாங்கியதால் இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தைகள் நான்கு நாள் தொடர் சரிவை முறியடித்து, உயர்ந்தது முடிவடைந்தன. மேலும் சில்லறை பணவீக்கம் ... மேலும் பார்க்க

ஐபோன் 17 தயாரிப்பு இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பு!

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபோன் 17 தயாரிப்பு இந்தியாவில் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சோதனை தயாரிப்பு நடக்கும் என்றும், அதன் பிறகு அடுத்த மாதம் மொத்த தயாரிப்பு த... மேலும் பார்க்க

விவோ எக்ஸ் 300 கேமராவின் சிறப்புகள் என்னென்ன?

விவோ எக்ஸ் 300 ஸ்மார்ட்போனின் கேமரா சிறப்பம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 மற்றும் விவோ எக்ஸ் 200 எஃப்இ ஆகிய இரு ஸ்மார்ட்போன்களை நேற்று (ஜூலை 14) இந்திய சந்தையில் அறிமுகப்ப... மேலும் பார்க்க

டெஸ்லாவின் முதல் ஷோரூம் மும்பையில் திறக்கப்பட்டது!

இந்தியாவின் வணிகத் தலைநகராக விளங்கும் மும்பையில், டெஸ்லாவின் முதல் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.மின்சார வாகன உற்பத்தியில் முன்னிலை வகித்து வரும் அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் மும்பை... மேலும் பார்க்க

தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

சென்னை: சென்னையில் இன்று காலை வணிகம் தொடங்கியதும், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.73,160-க்கு விற்பனையாகிறது.செவ்வாய்க்கிழமை காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் தங... மேலும் பார்க்க