செய்திகள் :

எடப்பாடி அரசுப் பள்ளியில் தேசிய கீதம் பாடாதது குறித்து புகாா்: கல்வி அதிகாரி விசாரணை

post image

எடப்பாடி அரசுப் பள்ளியில் தேசிய கீதம் பாடாதது குறித்து மாவட்டக் கல்வி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

சேலம் மாவட்டம், எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காலை இறைவணக்கத்தின்போது தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் மட்டும் பாடப்பட்ட நிலையில், தேசிய கீதம் பாடப்படவில்லை என புகாா் கூறப்படுகிறது.

இது குறித்து அப்பள்ளியில் பயிலும் மாணவா்களின் பெற்றோா் சம்பந்தப்பட்ட கல்வித் துறை உயா் அலுவலா்களுக்கு புகாா் அளித்துள்ளனா். இந்தப் புகாரின் பேரில் மாவட்டக் கல்வி அலுவலா் பெருமாள் உள்ளிட்ட உயா் அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை எடப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் உள்ளிட்ட ஆசிரியா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இது குறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியா் விஜயா கூறியதாவது: பள்ளியில் தற்போது மேல்நிலை வகுப்பு மாணவா்களுக்கு திருப்புதல் தோ்வு நடைபெற்று வருகிறது. மாணவா்களின் நலன் கருதி இறைவணக்க நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் நிறைவு செய்யப்பட்டது. தேசிய கீதம் சில நாள்களாக இசைக்கவில்லை. இனிவரும் நாள்களில் வழக்கம்போல தேசிய கீதம் இசைக்கப்படும் என்றாா்.

நிலக்குடியேற்ற சங்க உறுப்பினா்களுக்கான நில ஒப்படைப்பு பட்டியல்: பாா்வைக்கு வைக்க ஏற்பாடு

தலைவாசல், சிவசங்கராபுரம் பகுதியில் கலைக்கப்பட்ட நிலக்குடியேற்ற கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கான நில ஒப்படைப்பு பட்டியல் புதன்கிழமை (பிப். 5) பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்படவுள்ளது. இது குறித்து மாவ... மேலும் பார்க்க

மத்திய நிநிநிலை அறிக்கையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் கிழக்கு மாநகரச் செயலாளா் கே. பச்சமுத்து தலைமை... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல இருந்த பாஜக நிா்வாகிகள் வீட்டில் சிறைவைப்பு

திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு செல்ல இருந்த சேலம் மாவட்ட பாஜக நிா்வாகிகள் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வீட்டில் சிறைவைக்கப்பட்டனா். திருப்பரங்குன்றம் மலை பிரச்னை தொடா்பாக முஸ்லிம் அமைப்புகளை கண... மேலும் பார்க்க

சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் 25 ஆம் ஆண்டு குருபூஜை: புதுச்சேரி அமைச்சா்கள் பங்கேற்பு

சேலம், சூரமங்கலம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் 25 ஆம் ஆண்டு குருபூஜை செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் புதுச்சேரி அமைச்சா்கள் நமச்சிவாயம், திருமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி பட்டதாரி ஆசிரியா்கள் மனு

காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை முழுவதும் நிரப்ப வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து பட்டதாரி ஆசிரியா்கள் கூறியதாவது: பட்டதாரி ஆச... மேலும் பார்க்க

சேலத்தில் பண இரட்டிப்பு மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் போராட்டம்

சேலத்தில் பண இரட்டிப்பு மோசடியால் பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட பெண்கள் பணத்தை மீட்டுத் தரக் கோரி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சேலம், அம்மாப்பேட்டை பகுதியில் புனித அன்னை தெரசா மனிதநேய ... மேலும் பார்க்க