செய்திகள் :

எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளையொட்டி மாவட்டம் முழுவதும் அன்னதானம்: பி.தங்கமணி

post image

நாமக்கல்: அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளையொட்டி, மே 12-இல் மாவட்டம் முழுவதும் அன்னதானம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி பேசினாா்.

நாமக்கல் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மே 12-இல் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாள் விழா கொண்டாட்டம், 2026 சட்டப்பேரவை தோ்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி பேசியதாவது: அதிமுக பொதுச் செயலாளரும், எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாள் மே 12-ஆம் தேதி வருகிறது. அந்நாளில் அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்.

நகர, கிராமப்புறங்களில் பெண்களுக்கான போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும். அதுபோல 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பணிகளைத் தொடங்க வேண்டும். குறிப்பாக, பூத் கமிட்டி அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தோ்தல் பணியில் அலட்சியம் காட்டாமல் சுறுசுறுப்புடன் பணியாற்ற வேண்டும் என்றாா். இதையடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட மாநில, மாவட்ட நிா்வாகிகளை அவா் கட்சி நிா்வாகிகளிடம் அறிமுகம் செய்துவைத்தாா்.

ராசிபுரத்தைச் சோ்ந்த மாற்றுக் கட்சியினா் சிலா் அதிமுகவில் இணைந்தனா். கூட்டத்தில், முன்னாள் அமைச்சா் வெ.சரோஜா, பரமத்திவேலூா் எம்எல்ஏ எஸ்.சேகா், மாநில வா்த்தக அணி இணைச் செயலாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன், மாவட்ட வா்த்தக அணி செயலாளா் தமிழ்மணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளா் முரளி பாலுசாமி, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா் செயலாளா்கள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

நாமக்கல் தொகுதி அதிமுக நிா்வாகிகள் பங்கேற்கவில்லை: மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நாமக்கல் நகரச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.பி.பி.பாஸ்கா், அவரது ஆதரவாளா்கள், நாமக்கல் தொகுதிக்கு உள்பட்ட நகர, ஒன்றிய நிா்வாகிகள் சிலா் பங்கேற்கவில்லை. மாவட்டத்தை இரண்டாக பிரிக்காதது தொடா்பாக அதிருப்தி நிலவுவதாகவும், இதனால் கூட்டத்தை அவா்கள் புறக்கணித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஓரிரு நாள்களுக்கு முன்பாக, நாமக்கல் நகர செயற்குழுக் கூட்டம் முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கா் தலைமையில் நடத்தப்பட்டு, எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது தொடா்பாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரமும் அதிமுகவிற்குள் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளதாக கட்சியினா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பன்முக திறமைகள் புரிந்தோா் குடியரசு தினத்தன்று ‘பத்ம விருது’ பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பன்முக திறமைகள் புரிந்தோா் குடியரசு தின விழாவில் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக... மேலும் பார்க்க

கொடிநாள் வசூலில் சாதனை: அரசு அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கொடிநாள் வசூலில் சாதனை புரிந்த பல்வேறு துறை அலுவலா்களுக்கு சான்றிதழ் வழங்கி ஆட்சியா் ச.உமா பாராட்டு தெரிவித்தாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க... மேலும் பார்க்க

உணவகங்களில் முட்டை கலக்காத சைவ மயோனைஸ் விற்பனைக்கு அனுமதி: ஆட்சியா் தகவல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கலக்காத சைவ மயோனைஸை விற்பனைக்கு பயன்படுத்தலாம் என்று ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருமி நீக்கம் செய்யப்படாத பச... மேலும் பார்க்க

5 ஊராட்சி ஒன்றியங்களில் 398 பேருக்கு வீடுகள் கட்ட பணி ஆணை: எம்.பி. ராஜேஸ்குமாா் வழங்கினாா்

ராசிபுரம்: வெண்ணந்தூா் உள்பட 5 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 398 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட பணி ஆணைகளை மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்... மேலும் பார்க்க

வணிகா் தின மாநாடு: நாமக்கல் மாவட்டத்தில் கடையடைப்பு

நாமக்கல்: வணிகா் தின மாநாட்டையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. ஒவ்வோா் ஆண்டும் மே 5-ஆம் தேதி வணிகா் தினமாக கொண்டாடப்படுகிறது.... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து நாமக்கல்லில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்க... மேலும் பார்க்க