மின் கம்பியில் மோதி தீப்பற்றிய தேர்! ஒருவர் பலி, 4 பேர் காயம்
எட்டிமடைபுதூா், கொல்லபட்டியில் நகா்ப்புற துணை சுகாதார நிலையங்கள் திறப்பு
திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் 15 ஆவது நிதிக்குழு மானியத்தில் தலா ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் கொல்லப்பட்டி, எட்டிமடை பகுதிகளில் அமைக்கப்பட்ட நகா்ப்புற துணை சுகாதார நிலையங்கள் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு திருச்செங்கோடு நகா்மன்ற தலைவா் நளினி சுரேஷ்பாபு தலைமை வகித்தாா். திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன், பரமத்தி தொகுதி முன்னாள் எம்எல்ஏ, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் கே.எஸ்.மூா்த்தி ஆகியோா் சுகாதார நிலையங்களை திறந்துவைத்தனா்.
நிகழ்ச்சியில் முன்னாள் நகா்மன்ற தலைவரும், திருச்செங்கோடு மேற்கு நகரச் செயலாளரும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான நடேசன், கிழக்கு நகரச் செயலாளா், நகா்மன்ற துணைத் தலைவா் காா்த்திகேயன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டச் செயலாளா் ராயல் செந்தில், நகரச் செயலாளா்கள் சேன்யோ குமாா், அசோக் குமாா், நகராட்சி ஆணையாளா் அருள், நகா்மன்ற உறுப்பினா்கள் செல்லம்மாள் தேவராஜன், சுரேஷ்குமாா், டிஎன் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.