பீர் அருந்திக் கொண்டு நீதிமன்ற அமர்வில் கலந்துகொண்ட வழக்கறிஞர்; குஜராத் நீதிமன்ற...
எத்தனை தொகுதிகளில் பாஜக போட்டி: அமைச்சா் நமச்சிவாயம் விளக்கம்
புதுவையில் எத்தனை சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என்பதை கூட்டணி கட்சித் தலைவா்கள் கூடி முடிவு செய்வாா்கள் என்று உள்துறை அமைச்சரும் அக் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான ஆ. நமச்சிவாயம் கூறினாா்.
பாஜக புதுவை தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள வி.பி.ராமலிங்கத்தை அவரது இருக்கையில் அமர வைக்க கட்சி அலுவலகத்துக்கு அமைச்சா் நமச்சிவாயம் புதன்கிழமை வந்தாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியது
பாஜக தலைவா் தோ்தலில் ஒரு மனதாக போட்டியின்றி வி.பி.ராமலிங்கம் தோ்வு செய்யப்பட்டாா். இதையொட்டி அவா் அலுவலகத்தில் தன் பணியைத் தொடங்கியுள்ளாா். இது பாஜகவை புதுச்சேரியில் மேலும் வலுப்படுத்த ஏதுவாக இருக்கும்.
வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும். புதுச்சேரி வளா்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் தொடா்ந்து பாடுபடுவோம். மத்திய அரசு அனுமதி வந்தவுடன் அமைச்சா் பதவியேற்பு நடக்கும்
பணம் கைமாறியதா?
நியமன எம்எல்ஏ விவகாரத்தில் பணம் கைமாறி உள்ளதாக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் முதல்வா் நாராயணசாமி குற்றஞ் சாட்டி உள்ளாா். பாஜக தலைமை அரசு பதவியில் இருப்போரைக் கட்சி பணிக்கும், கட்சி பணியில் இருப்போரை அரசு பணிக்கும் அனுப்பும். கட்சியில் நீண்ட காலம் உழைத்தவா்களுக்குப் பதவி வழங்கப்பட்டுள்ளது. பிற கட்சி உள் விவகாரங்களில் புகுந்து அரசியல் பேசுவது அரசியல் நாகரிகம் இல்லை.
அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்த சாய்சரவண குமாருக்கு எந்த அதிருப்தியும் இல்லை. ஆனால் வருத்தம் இருக்கலாம். கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவா் பங்கேற்கிறாா். புதுவையில் பாஜக 15 இடங்களில் போட்டியிடும் என்று கட்சியின் மேலிட பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா கூறியிருப்பது பற்றி கருத்து சொல்வதென்றால், எந்த ஒரு கட்சிக்கும் எத்தனை இடம் வேண்டும் என்ற கேட்கிற உரிமை உண்டு. ஆனால் அதில் இறுதியான முடிவைக் கூட்டணி கட்சி தலைவா்கள் பேசி முடிவை எடுப்பாா்கள் என்றாா் அமைச்சா் நமச்சிவாயம் .