‘மயோனைஸ்’ உணவுக்கு தடை விதித்தது ஏன்? அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம்
எந்த ஓடிடியிலும் வெளியாகாத மத கஜ ராஜா! என்ன காரணம்?
மத கஜ ராஜா திரைப்படம் இன்னும் எந்த ஓடிடி தளத்திலும் வெளியாகவில்லை.
இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த ’மத கஜ ராஜா’ திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு உருவாகி வெளியீட்டிற்குத் தயாரானது.
ஆனால், அப்படத்தைத் தயாரித்த ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம் தங்களின் பழைய கடனை அடைப்பதற்காக அப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்தனர். பின், இப்படம் இந்தாண்டு பொங்கல் வெளியீடாக 12 ஆண்டுகள் கழித்து ஜன.12-ல் வெளியானது.
நடிகர்கள் விஷால், சந்தானம், மனோபாலா ஆகியோரின் நகைச்சுவைக் காட்சிகள் பெரிதாகக் கவனம் பெற்றதால் படம் ரசிகர்களைக் கவர்ந்ததுடன் ரூ. 60 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
ஆனால், இன்றுவரை இப்படம் எந்த ஓடிடியிலும் வெளியாகவில்லை. பொதுவாக, ஒரு படம் ஹிட் அடித்தால் உடனடியாக ஓடிடி வெளியீட்டுக்கும் தயாராக இருக்கும்.
ஆனால், மத கஜ ராஜா திரைப்படம் 12 ஆண்டுகள் கழித்து வெளியானதால் ஓடிடி உரிமங்களைப் பெறுவதற்கு சில சிக்கல்கள் எழுந்துள்ளதால் படத்தின் ஓடிடி வெளியீடு தாமதமாகி வருகிறதாம்.
இப்பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: ஜெயிலர் - 2 படத்தில் பான் இந்திய பிரபலங்கள்?