செய்திகள் :

எனக்கு எல்லாமே ‘இளையராஜா’ தான்! - தனிமை தீயை அணைத்த இசை

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

  ‘ஆண்டன் செகாவ்’ உலக புகழ் பெற்ற எழுத்தாளர் அவர்களின் ஒரு சிறுகதை இருக்கிறது ‘குதிரை வண்டிக்காரன் ஒருவன் அவனுக்கு குடும்பம் , உறவுகள் யாரும் இல்லை அவனும் குதிரையும் மட்டுமே அவன் வீட்டில். அவன் வாழ்வில் நடந்த ஒரு பிரச்சனையை அவன் குதிரை வண்டியில் ஏறும் மனிதர்கள் எல்லாரிடமும் கூற முயற்சிப்பான் , அவன் சந்திக்கும் எல்லா மனிதர்கள் என்று அனைவரிடமும் அவனின் பிரச்னையை கூற முயற்சி செய்வான் ஆனால் யாரும் அவனுக்கு செவிகுடுத்து கேட்க மாட்டார்கள் , இறுதியில் அவனின் வீட்டின் பின் புறத்தில் குதிரையை கட்டி போட்டு விட்டு குதிரையிடம் அவனின் பிரச்சனையை கூற துவங்குவான் அந்த கதை முடியும்.

            ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடிகர் ‘ஜீவா’ அவர்கள் தெருவில் காரில் சென்று கொண்டு இருக்கும் ஒருவனை பிடித்து வைத்து பேசிக்கொண்டு இருப்பார் ‘ஜீவா’ விடம் இருந்து தப்பித்து வேகமாக காரை எடுத்துக்கொண்டு அவன் சென்றுவிடுவான் ., ‘ஜீவா’ சோகமாக அமர்ந்து லேசாக அழுதுகொண்டே வேகமாக சென்ற காரை பார்த்து “டேய் கொஞ்சம் நேரம் எங்கூட பேசிட்டு போடா “ என்று கூறுவார்.

கற்றது தமிழ்

 ‘சார்லி சாப்ளின்’ அவர்களின் திரைக்காவியங்களில் எந்த வித உறவுமின்றி நாடோடியாகவே வலம் வருவார் ‘சார்லி சாப்ளின்’ , அவரின் திரைப்படத்தில் ஏதாவது புது உறவு ‘சாப்ளினுக்கு’ பிடித்தமான குணநலங்களோடு இருக்கும் அவருக்கு கிடைக்கும் , சில படங்களில் ‘சாப்ளினுக்கு’ பிடித்தமான உறவுகள் அவரை விட்டு விலகும் சூழல் ஏற்படும். 

    ‘ஆண்டன் செகாவின்’ கதை , ‘கற்றது தமிழ்’ படத்தில் வந்த அந்த காட்சி, ‘சார்லி சாப்ளினின்’ திரைப்படங்களில் காட்டப்பட்ட உறவுகளின் பிரிவு நமக்கு கூறும் கசப்பான உண்மை உலகில் பல மனிதர்கள் எவ்வாறு தனிமை தீயை விருப்பம் இன்றி ஆடையாக போட்டு தனிமையில் எரிந்து கொண்டு இருக்கின்றனர் என்ற கொடுமையை கூறுகிறது..

என் வாழ்விலும் சமீபத்தில் வெளியான இயக்குனர் ‘திரு.ராமின்’ ‘பறந்து போ’ படம் போல என் அப்பா-அம்மா என்னை  எனது 6ஆம் வகுப்பு பள்ளி விடுமுறை நாட்கள் வரை வீட்டில் வைத்து என்னை பூட்டிக்கொண்டு வேலைக்கு சென்று விடுவர்  தீராத தனிமை என்னை குழந்தை பருவத்திலே தொற்றிக்கொண்டு விட்டது.

பல கொடிய நோய்கள் வந்தால் கூட அந்த நோய் உடல் முழுவதுமாக மட்டும் தான் பரவும் சில பரிசோதனைகளுக்கு பிறகு மீள முடியும் . ஆனால்  உணர்வு ரீதியாக பாதித்து நம் மனதில் அது ஏக்கமாக மாறி விட்டால் எதை கொண்டு அணைப்பது.

10ஆம் வகுப்பு தேர்வு முடிந்து விடுமுறைகளில் என் வீட்டில் நான் தனியாகத்தான் இருப்பேன் ஆனால் இலக்கிய வாசிப்பும் , உலக சினிமாக்களும் என் தனிமை ஆடையை போக்கி சற்று ஆறுதல் தந்தது அப்போது நான் வாசித்த ‘இசையாலானது’ என்ற உலகின் பல முக்கியமான இசை மேதைகளை பற்றிய கட்டுரை படைப்பு , அப்புத்தகத்தை வாசித்து முடித்த உடன் அந்த புத்தகத்தில் இருந்த இசையமைப்பாளர்களின் இசையை கேட்டு ரசிக்க துவங்கிய சில நாட்களில் நம் “இளையராஜா” அவர்களின்  இசைகளையும் ரசிக்க துவங்கி விட்டேன், என் நீண்ட நாள் தனிமையை போக்கியவர் ‘இளையராஜா’ அவர்கள் தான் அவரின் இசை மட்டும்தான். 

               அதற்கு முன்னர் பல முறை பல ‘இளையராஜா’ அவர்களின் பாடல்களை கேட்டிருக்கிறேன் ஒரு நாள் இயக்குனர் ‘திரு.மகேந்திரன்’ அவர்களின் ‘ஜானி’  படத்தை பார்த்துக்கொண்டு இருந்தேன் பட முடிவில் “காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே” என்ற பாடலை 100 முறைக்கு மேல் கேட்டிருப்பேன் அந்த ஒரு நாளிலே . 

                  சின்ன வயதிலிருந்தே எனக்கு நண்பர்கள் கிடையாது அனைவரிடமும் அன்பாகத்தான் பேசுவேன் ஆனால் எனக்கு நண்பர்கள் நான் எதற்காவது அழைத்தால் என்னோடு உடன் வருவது என்று எனக்கு எந்த நண்பர்களுமில்லை .

10ஆம் வகுப்பு தேர்வு முடிந்து கிளாஸ் போட்டோ எடுத்து விட்டு பிரியும் போது என் வகுப்பில்  பல மாணவர்கள் 4வர்கள் -5 வர்கள் என்று பல குழுக்களாக பிரிந்து நின்று திரைப்படத்திற்கு போவது , 3நாள் டூர் , கிரிக்கட் கிளப்களில் சேர்வது என்று பல நண்பர்கள் கூடி சேர்ந்து பேசியபடியே சென்றனர் என்னிடம் இப்படி கூற யாரும் இல்லை , மற்றவர்கள் அவரவர் நண்பர்களோடு பேசி அங்கே போலாமா, இங்கே போலாமா என்று பேசியதை நான் நன்றாக கேட்டுக்கொண்டே வீட்டிற்க்கு வந்தேன். 

அந்த கொடுமையான மனநிலையில் நான் இருந்த போது நான் பார்த்த ‘ஜானி’ படத்தில் வந்த ‘காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே’ பாடல் பல வித மாறுதல்களை தந்தது , ‘ஸ்ரீதேவி’ அவர்கள் ஆஆஆஆஆஆ ,ஆஆஆஆஅ, ஆஆஆஅ,ஆகாஆகாஆகா அன்ஆ அன்ஆ அன்ஆ அன்ஆ ஆஆஆஆஆ காற்றில் , எந்தன் கீதம்’   என்று பாட துவங்கும் போது அதனுள் என் தனிமையை பொருத்திப்பார்த்து விட்டேன். 

            ‘அலைபோல் நினைவாக’ என்ற வரிகள் வரும் அந்த பாட்டில் ஆனால் அந்த படத்தில் ‘ஸ்ரீதேவி – ரஜினி’ அவர்களுக்கும் காதல் ஏற்ப்பட்டு பின் தான் பிரிந்திருப்பர் . ஆனால் ‘அலைபோல் நினைவாக ‘ என் நினைவில் வைத்துக்கொள்ள எனக்கு அப்போது ஒரு நண்பர்கள் கூட பழகிய நாட்கள் ஏதும் என்னிடம் இல்லை. இயற்க்கை ஒரு வருடத்திற்க்கு 365நாட்கள் (லீப்பியர் வந்தால் 366) கொடுத்திருக்கிறது  ஆனால் அந்த 365,366 நாட்களில் எனக்கு ஒரு நாட்கள் கூட நண்பர்களோடு கழித்த ஒரு நாள் என்று எதுவும் இருந்ததில்லை எனக்கு .

‘காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே’ பாடல் பல வருடங்கள் எனக்கு தனிமை போக்கியாக இருந்தது அந்த பாடல். அப்பாடல் முடியும் போது ‘ஸ்ரீதேவி’ அவர்களை தேடி ‘ரஜினி’ வந்து விடுவார். பல நாள் ‘ரஜினையை’ பிரிந்து இருந்த ‘ஸ்ரீதேவியின்’ தனிமை அங்கே அனைந்து இருக்கும். 

              என் விடியல் துவங்கும் என் அலாரம் முதல் என் கைப்பேசியின் ரிங்க்டோன் என்று எல்லாமே ‘இளையராஜா’ அவர்கள்தான் இருக்கிறார்.

மெல்ல இலக்கியங்களுக்குள் ஆர்வமாக மூழ்க ஆரம்பித்த உடன் வாழ்க்கை மீதான புரிதலில் என் நண்பர்கள் இல்லாத என் தனிமையில் இருந்து மெல்ல இயல்பு நிலைக்கு வந்தேன்.

            உலக புகழ் பெற்ற நடிகர் ‘வில் ஸ்மித்’ அவர்களின் ஒரு வாழ்க்கை தத்துவம் இருக்கிறது “எந்த மனிதர்களையும் துரத்தாதீர்கள் , உங்கள் வேலையை சரியாக செய்யுங்கள் , உங்களுக்கான மனிதர்கள் உங்களை தேடி வருவர் உங்களோடு பயணிப்பர்” என்று ….

            எனக்கான நண்பர்களை வெகு சிலரை இயற்கை எனக்கு தேர்ந்தெடுத்து தந்திருக்கிறது எனக்கு , அவர்களோடு நான் பயணித்து வருகிறேன் இப்போது ‘காற்றில் எந்தன் கீதம் ‘ பாடலை அவ்வப்போது கேட்கிறேன் .

           ஆனால் இப்போது என் நண்பர்களோடு கூடும்போது ஒரு பாடலில் வரும் வரி என் மனதில் வந்துகொண்டே இருக்கும் திரும்ப திரும்ப.

         ‘பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே…

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

விகடன் எனக்கு மட்டும் தெரிந்த காதலி! - நெகிழும் இளம் எழுத்தாளர் | #நானும்விகடனும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஒருவர் கூறுவதை பொறுமையாக கேட்க முடியாமல் போனது ஏன்? - மறந்துபோன பண்புகள் - 3

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சென்னையின் சூழலும் இங்குள்ள மக்களின் மனிதாபிமானமும்! - வாழ்வைக் காட்டிய ஊர் #ChennaiDays

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சினிமாவும் சாப்பாடும் தான் இங்கு பிரதானம்! - சென்னையின் பொன்னான நினைவலை #ChennaiDays

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி : 1950களில் என் மெட்ராஸ் வாழ்க்கை| #Chennaidays

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தனக்கு கீழ் வேலை செய்கின்ற ஒருவரின் சிறந்த யோசனையை ஏற்க மறுப்பது ஏன்? - மறந்துபோன பண்புகள் - 2

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க