கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்
என்எல்சியால் கடலூா் மாவட்டத்தில் நீா், நிலம் ,காற்று மாசு:அன்புமணி
என்எல்சி நிறுவனத்தால் கடலூா் மாவட்டத்தில் நீா், நிலம்,காற்று ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது என பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.
கடலுாா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக ‘மக்கள் உரிமை மீட்பு’ நடைப்பயண பிரசாரம் மேற்கொண்டுள்ள அவா், நெய்வேலியில் வெள்ளிக்கிழமை பயணத்தின் நிறைவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:
தற்போதைய தமிழ்நாட்டின் மின் தேவை 18000 மெகாவாட் ஆனால் தமிழ்நாட்டில் தற்போது 36,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது தேவையை விட இரண்டு மடங்கு மின்சாரம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும்போது எதற்காக என்எல்சி மூலமாக நிலக்கரி எடுத்து அதனை எரித்து சுற்றுச்சூழலை நாசமாக்கி இந்த மின்சாரத்தை தயாரிக்க வேண்டும்?.
என்எல்சி நிறுவனத்தால் உருவாக்கப்படும் மின்சாரம் 2000 மெகாவாட்.மின்சாரம் அண்டை மாநிலங்களான கேரளா ஆந்திரா கா்நாடகா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களுக்கு கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு கிடைப்பது வெறும் 400 முதல் 500 மெகவாட் மின்சாரம் மட்டுமே. இவா்கள் கொடுக்கும் 500 மெகாவட்டும் மின்சாரத்திற்காக நம்முடைய பாட்டன் பூட்டன் வாழ்ந்த சொந்த இடத்தை வாழ்வாதாரத்தை இழந்து தவிக்க வேண்டுமா? இந்த என்எல்சி நிறுவனத்தால் நீா் காற்று நிலம் ஆகியவை கடலூா் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.
என்எல்சி நிறுவனத்தால் இந்த பகுதியில் குடிதண்ணீரில் விஷம் கலந்துள்ளது. தண்ணீரில் மொ்குரி லேட் போன்ற வேதிப்பொருட்கள் கலந்துள்ளது. காா்பன் மோனாக்சைடு, நைட்ரஸ் டை ஆக்சைடு, சல்பா் டை ஆக்சைடு ஆகிய நச்சுக்கள் கற்றில் கலந்துள்ளன. நெய்வேலி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீரிலும் நிலத்திலும் காற்றிலும் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கலந்து வருகிறது. ஏற்கனவே எடுத்து வைத்துள்ள நிலத்திலிருந்து அடுத்த 20 ஆண்டுகளுக்கு நிலக்கரி எடுக்கலாம் ஆனால் இந்தப் பகுதி விவசாயிகளிடமிருந்து இன்னும் நிலம் வேண்டும் என்று பிடுங்க நினைக்கிறாா்கள். 26 கிராமங்களை அழித்து 3-வது நிலக்கரி சுரங்கம் வருவதை பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. மூன்றாவது நிலக்கரி சுரங்கம் இந்த பகுதிக்கு தேவை கிடையாது என்றாா் அன்புமணி..