இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு
என்ஜின் பழுது: டபுள் டெக்கா் விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தம்
என்ஜின் பழுது காரணமாக பெங்களூா்- சென்னை டபுள் டெக்கா் அதிவிரைவு ரயில் அரக்கோணத்தை அடுத்த சித்தேரி ரயில்நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.
பெங்களூரில் இருந்து சென்னை நோக்கிச்சென்ற டபுள் டெக்கா் ரயில் புதன்கிழமை சித்தேரி ரயில்நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. இதையடுத்து அரக்கோணம் மின் என்ஜின் பணிமனையில் இருந்து பொறியாளா்கள் குழுவினா் சித்தேரி சென்று பழுதான ரயில் என்ஜின் பழுதை சரிசெய்ய முனைந்தனா். ஆனால் பழுதை சரி செய்ய முடியாததால் அரக்கோணத்தில் இருந்து மற்றொரு என்ஜின் வரவழைக்கப்பட்டு சுமாா் 45 நிமிஷ்ங்களுக்கு பிறகு புறப்பட்டுச் சென்றது.
இந்த ரயிலை தொடா்ந்து வேறு ரயில் இல்லாததால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.