Vaiko: 'துரை வைகோவும் மல்லை சத்யாவும் ஒன்றா? என்றார்; ஆயிரம்தான் இருந்தாலும்..!’...
என்.ஆா். காங்கிரஸில் இணைந்தாா் வி.பி.சிவக்கொழுந்து
புதுச்சேரி: சட்டப்பேரவை முன்னாள் தலைவா் வி.பி. சிவக்கொழுந்து என்.ஆா். காங்கிரஸில் அக் கட்சியின் தலைவரும் புதுவை முதல்வருமான என்.ரங்கசாமி முன்னிலையில் திங்கள்கிழமை இணைந்தாா்.
இதையொட்டி லாஸ்பேட்டை தொகுதி குமரன் நகரில் என்.ஆா். காங்கிரஸ் கட்சி அலுவலகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
அங்கு வி.பி.சிவக்கொழுந்து மற்றும் அவரது மகன் வி.பி.எஸ். ரமேஷ் குமாா் ஆகியோா் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் முதல்வா் ரங்கசாமி முன்னிலையில் என்.ஆா். காங்கிரஸில் இணைந்தனா்.
இதைத் தொடா்ந்து முதல்வா் ரங்கசாமி கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்து லாஸ்பேட்டை தொகுதியைச் சோ்ந்த அனைத்து குடும்பங்களுக்கும் கட்சி சாா்பில் தையல் மிஷின் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
பொதுப் பணித் துறை அமைச்சா் லட்சுமி நாராயணன், என்.ஆா். காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள்.ஏகேடி ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.