எப்போதும் மகிழ்ச்சியான பிரதமரை பஹல்காம் தாக்குதல் மாற்றி விட்டது: சந்திரபாபு நாயுடு
பயங்கரவாதத்தை ஒடுக்கும் பிரதமரின் நடவடிக்கைகளில் ஒட்டுமொத்த துணை நிற்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமராவதி நகரை மறுஉருவாக்கம் செய்யும் திட்டப்பணிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். மேலும், ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களையும் தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது, ``பிரதமர் மோடிதான், இந்தியாவுக்கான சரியான தலைவர். அவர் பொதுவாகவே மிகவும் மகிழ்ச்சியான மனிதர். ஆனால், அத்தகைய மகிழ்ச்சியான நிலையில் இருந்தவரை தீவிர மனநிலைக்கு பஹல்காம் தாக்குதல் மாற்றியது.
பயங்கரவாதத்தை எதிர்க்கும் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுடன் ஆந்திர மக்கள் 5 கோடி பேர் உள்பட, ஒட்டுமொத்த நாடும் அவருடன் துணை நிற்கிறது’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க:டிரம்ப் 100 நாள்கள்! நூற்றுக்கு நூறு பெற்றாரா?