செய்திகள் :

எம்புரானில் நடித்த இந்த நடிகர் யார் தெரியுமா?

post image

எம்புரானில் அறிமுகமான நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் படம் வெளியான நாள்முதல் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் விமர்சனங்களைச் சந்தித்தாலும் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூலித்து மலையாளத்தின் அதிக வசூலித்த படம் என்கிற சாதனையை அடைந்துள்ளது.

அதேநேரம், சர்ச்சையை ஏற்படுத்தியதாகக் கருதப்பட்ட சில காட்சிகளை நீக்கியதுடன் 17 இடங்களில் கட் செய்துள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

படத்தின் மீதான சர்ச்சைகளும் விமர்சனங்களும் ஒருபுறம் இருந்தாலும் எம்புரானில் ஒரு காட்சியில் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமில்லாத ஒருவர் திடீரென வந்து சென்றார்.

சின்ன கதாபாத்திரத்திற்கு எதற்கு பின்னணி இசை? ஸ்லோமோஷன் ஷாட் என ரசிகர்கள் குழம்பினர்.

ஆனால், அந்த நடிகர் யாரோ ஒரு அறிமுக நடிகர் இல்லை. அவர் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூரின் மகன் ஆஷிஷ் ஜோ ஆண்டனி. இந்தப் படத்தின் மூலமே சினிமாவில் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

எம்புரானில் ஆண்டனி பெரும்பாவூரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதே படத்தில் தன் மகனையும் அவர் அறிமுகப்படுத்தியுள்ளது ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: எம்புரான் தயாரிப்பாளரிடம் ரூ. 1.5 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை

ஐஎஸ்எல்: இறுதி ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி!

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் நடப்பு சீசனில், பெங்களூரு எஃப்சி முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறியது. இந்த அணிகள் இடையே பெங்களூரில் கடந்த 2-ஆம் தேதி நடைபெற... மேலும் பார்க்க

துப்பாக்கி சுடுதல் போட்டியில் சிஃப்ட் கௌருக்கு தங்கம்; ஈஷா சிங்குக்கு வெள்ளி!

ஆா்ஜென்டீனாவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன.முதல் தங்கம்: இதில் மகளிருக்கான 50 மீட்டா் ரை... மேலும் பார்க்க

எஃப்1 காா் பந்தயத்தில் வொ்ஸ்டாபெனுக்கு முதல் வெற்றி!

எஃப்1 காா் பந்தயத்தில் நடப்பு சீசனின் 3-ஆவது ரேஸான ஜப்பான் கிராண்ட் ப்ரீயில், நடப்பு சாம்பியனாக இருக்கும் நெதா்லாந்தின் மேக்ஸ் வொ்ஸ்டாபென் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றாா்.ரெட் புல் டிரைவரான அவா், மொத... மேலும் பார்க்க

தங்கம் வென்று ஹிதேஷ் சாதனை - இந்தியா 6 பதக்கங்களுடன் நிறைவு!

பிரேஸிலில் நடைபெற்ற உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஹிதேஷ், ஞாயிற்றுக்கிழமை தங்கப் பதக்கம் வென்று அசத்தினாா்.இந்தப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியா் என்ற சாதனையை அவா் படைக்க, ம... மேலும் பார்க்க

சாா்லஸ்டன் ஓபன் மகளிா் டென்னிஸ்: இறுதிப் போட்டி யில் மோதும் பெகுலா - கெனின்

அமெரிக்காவில் நடைபெறும் சாா்லஸ்டன் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் உள்நாட்டு வீராங்கனைகளான ஜெஸ்ஸிகா பெகுலா - சோஃபியா கெனின் ஆகியோா் பலப்பரீட்சை நடத்துகின்றனா். முன்னதாக அரையிறுதியில், ... மேலும் பார்க்க

ஆடவா் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணி 4-வது முறையாக சாம்பியன்!

குஜராத் மாா்வாடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவா் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற சென்னை எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணியினா். ஜிஎம் அா்ஜுன் கல்யாண், ஐஎம் ஹரி கிர... மேலும் பார்க்க