செய்திகள் :

எம்.பி. சு. வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி!

post image

விழுப்புரத்தில் மாநில மாநாட்டில் கலந்துகொண்ட எம்.பி. சு. வெங்கடேசனுக்கு திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது மாநில மாநாடு விழுப்புரத்தில் 3 நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் மதுரை எம்.பி. சு. வெங்கடேசனும் இன்று காலை கலந்து கொள்ளச் சென்றிருந்தார்.

இந்த நிலையில், எம்.பி. வெங்கடேசனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவரை உடனடியாக விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், தற்போது நலமாக உள்ளதாகக் கூறினர். மேலும், அவர் இன்று மாலைக்குள் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியது. எம்.பி. வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன், மாவட்ட ஆட்சியர் பழனி, கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் இருவரும் மருத்துமனைக்கு நேரில் சென்று சு.வெங்கடேசனை சந்தித்து நலம் விசாரித்தனர்.

ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டும்: திமுக கூட்டணிக் கட்சிகள்!

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிதான் பொறுப்பேற்க வேண்டும் என்று திமுக கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த வெளிநபர் மாணவியை பாலியல்... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. விவகாரம்: தமிழக பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை விவாதிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கூட்டணிக் கட்சிகள் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.அண்ணா ப... மேலும் பார்க்க

மகளிர் உரிமைத் தொகை: விடுபட்டவர்களுக்கு 3 மாதங்களில் வழங்கப்படும் -உதயநிதி

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பித்து விடுபட்டவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு 3 மாதங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் 202... மேலும் பார்க்க

நாராயணன் தலைமையில் இஸ்ரோ புதிய உயரங்களைத் தொடும்! -முதல்வர் ஸ்டாலின்

இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 11-ஆவது தலைவராக வி.நாராயணன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா். தற்போதைய இஸ்ரோ ... மேலும் பார்க்க

மதுவிருந்து, இசைநிகழ்ச்சி இல்லாமல் திருமணம்: பஞ்சாப் கிராமத்தில் ரூ.21,000 சன்மானம் அறிவிப்பு

பஞ்சாப் மாநிலம், பதிண்டா மாவட்டத்தில் உள்ள பல்லோ கிராம பஞ்சாயத்தில் திருமண விழாக்களில் மது விருந்து மற்றும் ‘டிஜே’ இசை நிகழ்ச்சியை தவிா்க்கும் குடும்பங்களுக்கு ரூ.21,000 ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

கடல் ஆமைகளைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம்: அமைச்சா் க.பொன்முடி

கடல் ஆமைகளைப் பாதுகாப்பதில் நாட்டில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். சென்னை கிண்டி சிறுவா் இயற்கை பூங்காவில், கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மீட்க... மேலும் பார்க்க