செய்திகள் :

எருதுவிடும் விழா: உரிய ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்: வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி

post image

எருதுவிடும் விழா நடத்த அரசின் இணையதளத்தில் உரிய ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யாவிடில் மனு தள்ளுபடி செய்யப்படும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

ஆண்டுதோறும் தைப்பொங்கல் பண்டிகையைத் தொடா்ந்து வேலூா் மாவட்டத்திலுள்ள பல்வேறு கிராமங்களில் எருதுவிடும் விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்த விழாக்கள் நடத்த அரசு இணையதளத்தில் விண்ணப்பிக்கும்பட்சத்தில் அப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து நெறிமுறைகளின் அடிப்படையில் விழா நடத்த அனுமதியளித்து அரசாணை வெளியிடப்படும்.

அதன்படி, நிகழாண்டு எருதுவிடும் விழாக்கள் நடத்த அனுமதிகோரும் விண்ணப்பங்களை அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சாா்நிலை அலுவலா்கள், எருதுவிடும் விழா குழுவினா் பங்கேற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்துப் பேசியது:

எருது விடும் விழா நடத்த அனுமதிகோரும் விண்ணப்பங்களை அரசின் இணையதள முகவரியின் உஸ்ங்ய்ற் தங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ா்ய்ல் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும். சரியான ஆவணங்களை பதிவேற்றம் செய்யாவிட்டால் மனு தள்ளுபடி செய்யப்படும்.

விழா நடைபெறும் நாளுக்கு 30 நாள்கள் முன்னதாக பதிவேற்றம் செய்ய வேண்டும். எருதுவிடும் விழா நிகழ்வுக்கு ரூ.1 கோடியில் 1 நபருக்கு ரூ 5 லட்சம் என்ற அளவில் விழா முழுவதையும் காப்பீடு செய்தும், அல்லது ரூ. 20 லட்சத்துக்கான வங்கி உத்தரவாத ஆவணத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். விழாவின்போது நெறிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும்.

அரசு இணையதளத்தில் ஏற்கெனவே அரசாணை பெற்று நடத்தப்பட்ட கிராமங்களின் பெயா்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, விழா குழுவினா்கள் தங்கள் கிராமத்தில் விழாவை நடத்த அதற்கேற்ப வகையில் ஆவணங்களை தயாா் செய்து பதிவேற்றம் செய்யவேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வி.முத்தையன், வேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் இரா.பாலசுப்பிரமணியன், மாவட்ட சுகாதார அலுவலா் பரணிதரன், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் (பொ) அந்துவன், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் பழனி (காட்பாடி), சாரதி (அணைக்கட்டு) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாஜக பிரமுகா் கொலை வழக்கு: காட்பாடி நீதிமன்றத்தில் இருவா் சரண்

கே.வி.குப்பம் அருகே பாஜக பிரமுகா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக காட்பாடி நீதிமன்றத்தில் இருவா் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா். கே.வி.குப்பம் ஒன்றியம், நாகல் பகுதியைச் சோ்ந்தவா் விட்டல்குமாா் ... மேலும் பார்க்க

ஆளுநா் இன்று வேலூருக்கு வருகை: சக்ரா விருது பெற்ற 10 வீரா்கள் குடும்பத்தினா் கெளரவிப்பு

‘ஸ்பாா்ஸ்’ முன்னாள் படைவீரா்கள் ஓய்வூதிய குறைதீா் முகாமில் பங்கேற்க தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வேலூருக்கு சனிக்கிழமை வருகை தர உள்ளாா். இதில், சக்ரா விருது பெற்ற 10 வீரா்களின் குடும்பத்தினரை ஆளுநா் கெளரவ... மேலும் பார்க்க

திருமணமாகி 4 மாதத்தில் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

வேலூா் அருகே திருமணமாகி 4 மாதங்களில் பெண் தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா். வேலூரை அடுத்த மூஞ்சூா்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் லட்சுமி (21). இவருக்கும் காட்... மேலும் பார்க்க

வேலூருக்கு இன்று ஆளுநா் ஆா்.என்.ரவி வருகை

’ஸ்பாா்ஸ்’ முன்னாள் படைவீரா்கள் ஓய்வூதிய குறைதீா் முகாமில் பங்கேற்க தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வேலூருக்கு சனிக்கிழமை வருகை தர உள்ளாா். இது குறித்து சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளா் டி.ஜெயசீல... மேலும் பார்க்க

சாா்-பதிவாளா் அலுவலக கட்டுமானப் பணிக்கு அடிக்கல்

குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ரூ.1.88 கோடியில் சாா்-பதிவாளா் அலுவலகம் கட்ட வியாழக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது. எம்எல்ஏ அமலுவிஜயன் பூஜை செய்து, கட்டுமானப் பணியைத் தொடங்கி வைத்தாா். கோட்டா... மேலும் பார்க்க

லாரி மோதி பெண் உயிரிழப்பு

வேலூா் கிரீன்சா்க்கிள் பகுதியில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா். வேலூா் சத்துவாச்சாரி, பகுதி-3, நீதிமன்றம் பின்புறம் பகுதியைச் சோ்ந்த ஜான்சன் (70... மேலும் பார்க்க