மின்சார பேருந்துகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட மாட்டாது: அமைச்சர் சிவசங்க...
எலிப் பசையை உள்கொண்ட குழந்தை உயிரிழப்பு
மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே பற்பசை என்று நினைத்து எலிப் பசையை உள்கொண்ட குழந்தை உயிரிழந்தாா்.
அஸ்ஸாம் மாநிலம், உதல்குரி மாவட்டத்தைச் சோ்ந்தவா் அஸ்தால் அலி. இவா் தனது குடும்பத்தினருடன் செக்கானூரணியில் உள்ள கோழிப் பண்ணையில் வேலை பாா்த்து வருகிறாா்.
இந்த நிலையில், இவரது மகள் ஆரிபா (2) வீட்டில் இருந்த எலிப் பசையை பற்பசை என நினைத்து உள்கொண்டாா். இதனால், உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட ஆரிபா உயிரிழந்தாா். இதுகுறித்து செக்கானூரணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.