சமூக முன்னேற்றத்துக்கு மனித வளம் முக்கியம்: கவிஞா் வைரமுத்து
எலுமிச்சை தோலைத் தூக்கி எறியாதீர்கள்! தலைமுடிக்குப் பயன்படுத்தலாம்!!
வைட்டமின் சி அதிகம் நிறைந்த எலுமிச்சை, உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம், ஃபிளாவனாய்டுகள் என சத்துகள் அதிக அளவில் உள்ளன. இவை தலைமுடி வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிக்கின்றன.
தலைமுடி வளர்க்கு எலுமிச்சை எப்படி உதவும்?
எலுமிச்சை தோலில் பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே இது தலையின் வேர்க்கால்களில் உள்ள அழுக்கு, அதிகப்படியான எண்ணெய், பொடுகை நீக்கி சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
தலையில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதையோ அல்லது அதிகப்படியான வறட்சியையோ தடுக்கிறது. தலைமுடியின் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.
எலுமிச்சை தோலில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. தலைமுடி வளர்வதற்கு இது அவசியம் தேவை.
இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் தலைமுடி வேர்க்கால்களுக்கு ஊட்டமளித்து முடி உதிர்தலைக் குறைக்கின்றன.
என்ன செய்ய வேண்டும்?
எலுமிச்சை தோலை நீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். எலுமிச்சை சாறு, நீரில் நன்றாக இறங்கியவுடன் ஆற வைத்து பின்னர் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து அலச வேண்டும். தலைமுடியை ஷாம்பூ கொண்டு கழுவிய பின்னரும் இந்த எலுமிச்சை நீரை தேய்க்கலாம். வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்துவர தலைமுடி வளரும்.
எலுமிச்சை தோலை காய வைத்து பவுடர் செய்து அத்துடன் கெட்டித் தயிர், தேங்காய் எண்ணெய் சேர்த்து அந்த கலவையை முடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
எலுமிச்சை தோலை ஏதேனும் ஒரு வகையில் முடியில் தேய்த்து வருவதன் மூலம் தலைமுடி உதிர்ந்தது முடி வளர்வதை ஊக்குவிக்கும்.
[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]
இதையும் படிக்க | கருவுறாமைக்கு காரணங்கள் என்ன? சரிசெய்வது எப்படி?