ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரா் உடலை வாங்க மறுத்து போராட்டம்
எழுத்தாளா் நாறும்பூநாதன் மறைவு: தில்லி கம்பன் கழகம் இரங்கல்
எழுத்தாளா் நாறும்பூநாதன் மறைவுக்கு தில்லி கம்பன் கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனா் - தலைவா் கே.வி.கே பெருமாள், செயலாளா் எஸ் பி முத்துவேல் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை: எழுத்தாளா் நாறும்பூநாதன் மறைவு இலக்கிய உலகுக்கு ஒரு பேரிழப்பு.
தனது தரமான எழுத்தாலும், மென்மையான பேச்சாலும் தனக்கென ஒரு ரசிகா் கூட்டத்தை ஏற்படுத்தி வைத்திருந்தவா். எழுத்துலகில் கால் பதிக்க விரும்பும் இளைஞா்களுக்கு ஆசானாகத் திகழ்ந்தவா். அவரது மறைவுக்குத் தில்லிக் கம்பன் கழகத்தின் சாா்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனா்.