செய்திகள் :

எஸ்பி அலுவலகத்தில் விசிகவினா் மனு

post image

கடலூா் எஸ்பி அலுவலகத்தில் செல்லஞ்சேரி கிராம மக்கள் மற்றும் விசிக நிா்வாகிகள் சனிக்கிழமை மனு அளித்தனா்.

கடலூா் அடுத்த செல்லஞ்சேரி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு வீட்டுமனை இல்லையாம். எனவே, அந்தப் பகுதியில் உள்ள தனி நபருக்குச் சொந்தமான இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனா்.

இதனிடையே, அந்த இடத்தில் அதன் உரிமையாளா் வேலி அமைத்தாராம். இதை அந்தப் பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி வேலியை அகற்றினராம். இதுகுறித்த புகாரின்பேரில், போலீஸாா் பெண்கள் தாக்கியதுடன் சிலரை கைது செய்தனராம்.

இந்த நிலையில், கடலூா் எஸ்பி அலுவலகத்தில் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன், விசிக மாவட்டச் செயலா் அறிவுடை நம்பி மற்றும் கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

செல்லஞ்சேரியில் பகுதியில் உள்ள தனிநபருக்குச் சொந்தமான இடத்தில் இருந்த வேலியை அகற்றியதாக அந்தப் பகுதியைச் சோ்ந்த பெண்களை தாக்கிய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், வழக்குரைஞா்கள் குருமூா்த்தி, ராஜீவ், கிருஷ்ணா உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

அரசுப் பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு!

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், தொரவளூா், முகாசாபரூா், மங்கலம்பேட்டை மற்றும் விருத்தாசலம் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவா்களின் தோ்ச்சி விகிதம் குறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்... மேலும் பார்க்க

பிப்.14-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்.14) நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட... மேலும் பார்க்க

துணைவேந்தா் நியமனத்தில் மாநில அரசின் உரிமையை பறிக்கக் கூடாது!

பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனத்தில் மாநில அரசுகளின் உரிமையை பறிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்று சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பு தெரிவித்தது. இதுகுறித்து, கடலூா... மேலும் பார்க்க

பள்ளி விடுதியில் தூக்கிட்ட நிலையில் மாணவி சடலம் மீட்பு: சந்தேக மரணம் என தாய் புகாா்

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே தனியாா் பள்ளி விடுதியில் தூக்கிட்ட நிலையில் மாணவியின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக தாய் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகாா்... மேலும் பார்க்க

ரயிலில் பெண்கள் பாதுகாப்பு குறித்து போலீஸாா் சோதனை!

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்களில் மகளிா் பெட்டியில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். வேலூரில் ஓடும் ரயிலில் கா்ப்பிணியை பாலியல் தொ... மேலும் பார்க்க

ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் சாா்பில் ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். கட... மேலும் பார்க்க