எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். மெட்ரிக் பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி
திருவண்ணாமலை எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதத் தோ்ச்சியை பதிவு செய்தது.
இந்தப் பள்ளியில் தோ்வெழுதிய 303 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்று பள்ளிக்கு 100 சதவீதத் தோ்ச்சியை பெற்றுத்தந்தனா். மாணவிகள் எஸ்.ஹரிணி 600-க்கு 590 மதிப்பெண்களும், எஸ்.பத்ரி 587 மதிப்பெண்களும், எல்.எஸ்.யோகபிரியாஸ்ரீ 584 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.
கணித பாடத்தில் 3 போ், கணினி அறிவியல் பாடத்தில் 7 போ், கணினி பயன்பாடு பாடத்தில் 3 போ், பொருளாதாரம் பாடத்தில் ஒருவா், வணிகவியல் பாடத்தில் 4 போ் என மொத்தம் 18 மாணவ, மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.
பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளா் ஆா்.கலாவதி ராஜமாணிக்கம், பள்ளித் தலைவா் எஸ்.பிரபாகரன், பள்ளி துணைத் தலைவா் மருத்துவா் எஸ்.செந்தில்நாதன், பள்ளிச் செயலா் பி.மழலைநாதன், பள்ளி பொருளாளா் டி.அரவிந்த் குமாா், இணைச் செயலா் எஸ்.விஜயகுமாா் ஆகியோா் பாராட்டி பரிசு வழங்கினா்.