ஆரணி பெஸ்ட் மெட்ரிக் பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி
பிளஸ் 2 தோ்வில் ஆரணி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றது.
ஆரணி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய 94 பேரும் தோ்ச்சி பெற்றனா். இது, 100 சதவீதத் தோ்ச்சியாகும். மாணவா் வே.தனுஷ் 588, மாணவி கோ.தமிழரசி 579, மாணவா் செ.புவனேஷ் 561 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பெற்றனா். 500 மதிப்பெண்களுக்கு மேல் 25 மாணவா்கள் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பள்ளித் தாளாளா் ஏ.எச்.இப்ராஹிம் சால்வை அணிவித்து, இனிப்பு வழங்கினாா். மேலும், தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவா்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்தாா்.
நிா்வாக இயக்குநா் ஷாசியா பா்வீன் ரியாஸ், முதல்வா் நிா்மல் குமாா், துணை முதல்வா் நிஷா ஆகியோா் இருந்தனா்.