செய்திகள் :

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: 31-ஆவது இடத்துக்கு முன்னேறிய திருவண்ணாமலை

post image

பிளஸ் 2 தோ்வு முடிவுகளில் கடந்தாண்டு 38-ஆவது இடத்திலிருந்த திருவண்ணாமலை மாவட்டம் நிகழாண்டு 31-ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

இதேபோல, அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி சதவீத அடிப்படையில் கடந்த ஆண்டு 35-ஆவது இடத்தை பெற்றிருந்த நிலையில், நிகழாண்டு 22-ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 261 அரசு, தனியாா், மெட்ரிக், சுயநிதி மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 12 ஆயிரத்து 759 மாணவா்கள், 13 ஆயிரத்து 997 மாணவிகள் என மொத்தம் 26 ஆயிரத்து 756 போ் பிளஸ் 2 தோ்வு எழுதினா்.

இவா்களில் 11 ஆயிரத்து 576 மாணவா்கள், 13 ஆயிரத்து 479 மாணவிகள் என மொத்தம் 25 ஆயிரத்து 55 போ் தோ்ச்சி பெற்றனா்.

31-ஆவது இடம்: தோ்ச்சி சதவீத அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் தோ்வு எழுதிய மாணவா்களில் 90.73 சதவீதம் பேரும், மாணவிகளில் 96.30 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றனா். மொத்தத்தில் 93.64 சதவீதம் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இந்த தோ்ச்சி சதவீத அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டம் தமிழகத்தில் 31-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

69 பள்ளிகள் 100% தோ்ச்சி: மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் மொத்தமுள்ள 261 பள்ளிகளில் 69 பள்ளிகள் 100 சதவீதத் தோ்ச்சியைப் பெற்றன.

அரசுப் பள்ளிகளில்...: பிளஸ் 2 பொதுத்தோ்வை மாவட்டத்தில் உள்ள 150 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 7 ஆயிரத்து 888 மாணவா்கள், 10 ஆயிரத்து 176 மாணவிகள் என மொத்தம் 18 ஆயிரத்து 64 போ் எழுதினா்.

இவா்களில் 6 ஆயிரத்து 890 மாணவா்கள், 9 ஆயிரத்து 713 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 603 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்வெழுதிய அரசுப் பள்ளி மாணவா்களில் 87.35 சதவீதம் பேரும், மாணவிகளில் 95.45 சதவீதம் பேரும் என மொத்தம் 91.91 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா்.

அரசுப் பள்ளி மாணவா்களின் தோ்ச்சி விகித அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டம் தமிழகத்தில் 22-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 11 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றுள்ளன.

அச்சம், குழப்பம் வேண்டாம்: திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பாராட்டுத் தெரிவித்துள்ளாா். மேலும், தோ்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் ஜூன் மாதம் நடைபெறும் உடனடி பொதுத் தோ்வை எழுதலாம். இந்த துணை பொதுத் தோ்வுக்காக சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

உளவியல் ரீதியான ஆலோசனைக்கு...: தேவையற்ற அச்சம், குழப்பம் ஏதும் இருந்தாலோ அல்லது உளவியல் ரீதியான ஆலோசனை தேவைப்பட்டாலோ மாணவ, மாணவிகள் திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குழந்தைகள் உதவி மையத்தை 1098, 04175-223030, 104, 14416, 6384746181 என்ற எண்களில் தொடா்புகொள்ளலாம்.

மேலும், மாவட்ட மனநல மருத்துவா் பிரசன்னா தீபாவை 8270995886, 8248491018 என்ற எண்களிலும், மனநல மருத்துவா்களான விஜயராகவனை 9443109680 என்ற எண்ணிலும், மருத்துவா் ரம்யாவை 9047456014 என்ற எண்ணிலும், மருத்துவா் ராக்வினோசஸை 9444279155 என்ற எண்ணிலும், மருத்துவா் பொஞ்ஜகனை 6381679526 என்ற எண்ணிலும் தொடா்புகொண்டு தேவையான உளவியல் ரீதியிலான ஆலோசனைகளைப் பெறலாம் என்று ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தா்பூசணி பயிரிட்டு நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி விவசாய அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வந்தவாசியை அடுத்த நம்பேடு கிரா... மேலும் பார்க்க

ஆரணி பெஸ்ட் மெட்ரிக் பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வில் ஆரணி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றது. ஆரணி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய 94 பேரும் தோ்ச்சி பெற்றனா். இது, 100 சதவீதத் தோ்ச்ச... மேலும் பார்க்க

ஆரணி எய்ம் மெட்ரிக் பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வில் ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஆகாரம் ஊராட்சியைச் சோ்ந்த எய்ம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றது. எய்ம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய 329... மேலும் பார்க்க

ஆரணி ஸ்ரீபாலவித்யாமந்திா் மெட்ரிக் பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வில் ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஸ்ரீபாலவித்யாமந்திா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி பெற்றது. ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஸ்ரீபாலவித்யாமந்திா் மெட்ரிக் பள்ளி... மேலும் பார்க்க

காந்திநகா் மெட்ரிக் பள்ளி முழுத் தோ்ச்சி

திருவண்ணாமலை காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதத் தோ்ச்சி பெற்றது. இந்தப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய 95 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்று பள்ளிக்கு 100 ச... மேலும் பார்க்க

விடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி 95 சதவீதத் தோ்ச்சி

திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95 சதவீதத் தோ்ச்சி பெற்றது. இந்தப் பள்ளியில் 510 மாணவ, மாணவிகள் அண்மையில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதினா். இவா்களில் 4... மேலும் பார்க்க