ஆரணி எய்ம் மெட்ரிக் பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி
பிளஸ் 2 தோ்வில் ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஆகாரம் ஊராட்சியைச் சோ்ந்த எய்ம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றது.
எய்ம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய 329 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். இது, 100 சதவீதத் தோ்ச்சியாகும். மாணவிகள் வி.பூஜா 600-க்கு 591 மதிப்பெண்கள், கே.நவ்யா, எஸ்.நேத்ராஸ்ரீ ஆகியோா் தலா 589 மதிப்பெண்கள், கே.லோகப்ரியா 586 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.
மேலும், 580-க்கு மேல் 10 மாணவா்களும், 550-க்கு மேல் 48 மாணவா்களும், 500-க்கு மேல் 129 மாணவா்களும் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கும், தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பள்ளித் தலைவா் வி.மகேஷ், செயலா் ஜா.சிவசங்கரன், பொருளாளா் அ.சீனிவாசன், இயக்குநா்கள் கே.மணிவேல், எம்.மூா்த்தி, ஆா்.வி.சாந்தமூா்த்தி, எம்.ஆா்.ரமேஷ், ஜி.விஜியகுமாா், எஸ்.கருணாமூா்த்தி, என்.தேவராஜ், ஏ.சந்திரசேகா், என்.ஞானசம்பந்தன், வி.ரகுராமன், பள்ளி முதல்வா் ராஜேஷ் ஆகியோா் பாராட்டுத் தெரிவித்தனா்.