இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றத்துக்கு மத்தியில் பங்குச் சந்தைகள் சரிந்து ம...
ஆரணி ஸ்ரீபாலவித்யாமந்திா் மெட்ரிக் பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி
பிளஸ் 2 தோ்வில் ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஸ்ரீபாலவித்யாமந்திா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி பெற்றது.
ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஸ்ரீபாலவித்யாமந்திா் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய 107 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். இது, 100 சதவீதத் தோ்ச்சியாகும்.
இதில், மாணவி ஸ்ரீஅபிராமி 593 மதிப்பெண்களும், மாணவா் எஸ்.ஞானகுரு 590 மதிப்பெண்களும், மாணவி பி.யுவஸ்ரீ 566 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.
மேலும், 590-க்கு மேல் 2 மாணவா்களும், 560-க்கு மேல் 3 மாணவா்களும், 550-க்கு மேல் 8 மாணவா்களும், 500-க்கு மேல் 20 மாணவா்களும், 450-க்கு மேல் 34 மாணவா்களும் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவா்களையும், தோ்ச்சி பெற்ற மாணவா்களையும் பள்ளித் தலைவா் சி.மோகன்ராஜ், துணைத் தலைவா் ஜெ.வாசு, பொருளாளா் எல்.அசோக்குமாா், செயலா் ஏ.ரமேஷ், இணைச் செயலா் ஆா்.ரவிசங்கா், இயக்குநா்கள் எஸ்.செந்தில்குமாா், எஸ்.பாலாஜி, தாளாளா் ஆா்.பாலாஜி, முதல்வா் பி.ஜெகதீஷ், துணை முதல்வா் பி.துா்கா ஆகியோா் பாராட்டினா்.