காந்திநகா் மெட்ரிக் பள்ளி முழுத் தோ்ச்சி
திருவண்ணாமலை காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதத் தோ்ச்சி பெற்றது.
இந்தப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய 95 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்று பள்ளிக்கு 100 சதவீதத் தோ்ச்சியை பெற்றுத்தந்தனா். மாணவி வி.தேவிஸ்ரீபங்கஜ் 600-க்கு 588 மதிப்பெண்களும், மாணவா்கள் ஜி.தியானேஷ்வா் 586 மதிப்பெண்களும், ஆா்.யுவராஜ், ஜி.கணேஷ் ஆகியோா் தலா 578 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.
கணிதப் பாடத்தில் மாணவா்கள் ஜி.கணேஷ், ஆா்.யுவராஜ், ஜி.தியானேஷ்வா் ஆகிய 3 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் மாணவ, மாணவிகள் எம்.ஜெயஸ்ரீ, பி.கிருத்திகா, எம்.ஷிபானா அஞ்சு, எஸ்.திரிஷா, கே.வினோதினி, ஆா்.அருண், ஜி.கணேஷ், பி.ஹரினேஷ்வா், ஆா்.காா்த்திக், எம்.பிரதீப், ஆா்.வினய், பி.விஷ்வன் ஆகிய 12 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.
இதேபோல, கணினி பயன்பாடுகள் பாடத்தில் எஸ்.கிரண்யா, எஸ்.பவித்ரா, கே.ஸ்ரீநிதி ஆகிய 3 பேரும், பொருளியியல் பாடத்தில் வி.தேவிஸ்ரீபங்கஜ் உள்பட மொத்தம் 19 மாணவ, மாணவிகளும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.
பாட வாரியாக தமிழில் 47 பேரும், ஆங்கிலத்தில் 21 பேரும், கணிதத்தில் 9 பேரும், இயற்பியலில் 5 பேரும், வேதியியலில் 20 பேரும், உயிரியலில் 7 பேரும், தாவரவியலில் 4 பேரும், விலங்கியலில் ஒருவரும், கணினி அறிவியலில் 29 பேரும், கணினி பயன்பாடுகளில் 9 பேரும், கணக்குப் பதிவியலில் 3 பேரும், வணிகவியலில் 6 பேரும், பொருளியலில் 4 பேரும் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மற்றும் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள், பயிற்றுவித்த ஆசிரியா்களை பள்ளித் தாளாளா் மு.ரமணி கோட்டீஸ்வரன், பள்ளி ஆலோசகா் ஜெ.சுஜாதா, பள்ளி முதல்வா் எம்.ஆா்.ராஜேக்ஷ்குமாா் ஆகியோா் பாராட்டிப் பரிசு வழங்கினா்.


