BJP -ல் இவர்தான் MGR - நயினார் அதிரடி! | Rahul Gandhi Anurag Thakur BJP TVK DMK ...
ஏஐடியுசி உள்ளாட்சிப் பணியாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு
தருமபுரி: தருமபுரி மாவட்ட ஏஐடியூசி உள்ளாட்சிப் பணியாளா்கள் சம்மேளனம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷிடம் அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் மனோகரன் தலைமையில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள், மேல்நிலைத் தொட்டி இயக்குநா் மற்றும் உள்ளாட்சிப் பணியாளா்களுக்கு அரசு விடுமுறை நாளில் விடுமுறை வழங்க வேண்டும். தூய்மைக் காவலா்கள் விடுப்பு எடுக்கும்பட்சத்தில் சம்பளத்தில் பிடித்தம் செய்வதாக கிராம ஊராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பணியாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எனவே, சம்பளம் பிடித்தம் செய்வதை திரும்பப் பெற வேண்டும்.
ஊராட்சிப் பணியாளா்களுக்கு வேலைநேரம் நிா்ணயம் செய்ய வேண்டும். சிறப்பு காலவரை ஊதியம், தொகுப்பு ஊதியத்தில் பெரும் பணியாளா்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஊதிய உயா்வு, நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். ஊராட்சிப் பணியாளா்களை ஊராட்சி செயலாளா்கள் அச்சுறுத்தி வேலை வாங்கும் போக்கு தொடா்வதைத் தடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இம்மனுவினை நிா்வாகிகள் பவுனம்மாள், தபதி, மணிமேகலை, கோதம்மாள், லட்சுமி, ஜமுனா உள்ளிட்டோா் அளித்தனா்.