செய்திகள் :

ஏமன்: கேரள செவிலியருக்கு மரண தண்டனை; ஒப்புதல் அளித்த அதிபர்... காப்பாற்றப் போராடும் குடும்பத்தினர்!

post image
கேரள செவிலியர் ஒருவருக்கு ஏமன் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தண்டனைக்கு ஏமன் அதிபர் அனுமதி வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரளாவைச் சேர்ந்தவர் நிமிஷா ப்ரியா. ஏமன் தலைநகர் சனாவில் செவிலியராகப் பணியாற்றி வந்திருக்கிறார். இவர் ஏமனைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் சேர்ந்து சனாவில் கடந்த 2015-ல் கிளினிக் ஒன்றைத் தொடங்கி இருக்கிறார். ஆனால் மஹ்தி மொத்த வருவாயையும் எடுத்துக் கொண்டு நிமிஷாவை உடல்ரீதியாக துன்புறுத்தி இருக்கிறார். மேலும் நிமிஷாவின் பாஸ்போர்ட்டையும் பறித்து வைத்துக்கொண்டிருக்கிறார்.

நிமிஷா ப்ரியா

இது தொடர்பான புகாரில் சனா போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மஹ்திக்கு மயக்க மருந்து செலுத்தி பாஸ்போர்ட்டை திரும்பப் பெற நிமிஷா முயன்றிருக்கிறார். ஆனால் இந்த முயற்சியில் ஓவர் டோஸ் காரணமாக மஹ்தி உயிரிழந்திருக்கிறார். இது தொடர்பான வழக்கில் நிமிஷாவுக்கு ஏமன் நீதிமன்றம் கடந்த 2018-ல் மரண தண்டனை விதித்தது. அப்போது முதல் அவரது விடுதலைக்காக கேரளாவில் உள்ள அவரது குடும்பத்தினர் போராடி வருகின்றனர்.

நிமிஷாவின் மேல்முறையீட்டு மனுவை ஏமன் உச்ச நீதிமன்றம் கடந்த 2023-ல் நிராகரித்தது. பாதிக்கப்பட்ட மஹ்தியின் குடும்பம் அவர்களின் பழங்குடியின தலைவரின் மன்னிப்பை பெறுவதே, நிமிஷா விடுதலையாவதற்கு ஒரே வாய்ப்பாக உள்ளது. இதற்காக நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி ஏமன் சென்றுள்ளார். அங்குள்ள இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் மன்னிப்பை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். எனினும் இதற்கான முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை.

representation image

இந்நிலையில் நிமிஷாவுக்கான மரண தண்டனைக்கு ஏமன் அதிபர் ரஷாத் அல்-அலிமி தற்போது ஒப்புதல் அளித்திருக்கிறார். இது நிமிஷாவின் குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. ஒரு மாதத்திற்குள் நிமிஷா தூக்கில் இடப்படலாம் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிமிஷாவைக் காப்பாற்ற இந்திய அரசு உதவ வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

TVK Vijay : `ஆளுநர் யாராக இருந்தாலும்..!' - சட்டமன்ற சர்ச்சை குறித்து விஜய் கூறுவதென்ன?

இன்று, 2025ம் ஆண்டுக்கான முதல் தமிழக சட்டமன்றக் கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.இதேப்போல கடந்த ஆண்டும் ஆளுநர் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கத... மேலும் பார்க்க

``தாராவியில் வீடு பெற தகுதியில்லாத 1 லட்சம் மக்களுக்கு...” - ஏக்நாத் ஷிண்டே சொல்வதென்ன?

மும்பை தாராவி, ஆசியாவிலேயே அதிக அளவில் குடிசைகள் உள்ள பகுதி. இக்குடிசைகளை அகற்றிவிட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. தற்போது அத்திட்டம் தீ... மேலும் பார்க்க

தோழமை கட்சிகளும் சொல்கிறார்கள் முதல்வரே... போராட்டங்களை அஞ்சி ஒடுக்குகிறதா திமுக அரசு?!

`தி.மு.க அரசு மறுத்து வருவது வேதனையாக உள்ளது’விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய பிரகாஷ்காரத், "மத்திய பா.ஜ.க அரசு வகுப்புவாத, மதவெறி கொண்ட அ... மேலும் பார்க்க

``கொடநாட்டில் CCTV-ஐ ஆஃப் செய்ய சொன்ன 'Sir' யார்?" - ஓ.பி.எஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் கேள்வி!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தொந்தரவு சம்பவத்தில் கைதாகி உள்ள ஞானசேகரன் போனில் யாருடனோ 'சார்' என்று பேசினார் என்று பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போதிருந்து 'யார் அ... மேலும் பார்க்க

TN Assembly: "கடந்த ஆண்டே தெளிவுபடுத்தி இருக்கிறோம்" - ஆளுநர் வெளியேறியது குறித்து துரைமுருகன்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம்.அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கவிருந்தது. இதற்காக ஆளுநர் ரவி இன... மேலும் பார்க்க

TN Assembly : `வெளியேற்றப்பட்ட அதிமுக; வெளியேறிய காங்கிரஸ்...' சட்டசபையில் நடந்தது என்ன?

ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வந்த வேகத்தில் புறப்பட்டு சென்றிருக்கிறார்.இன்று ஆளுநர், சட்டமன்றத்துக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் ... மேலும் பார்க்க