செய்திகள் :

ஏரி உபரிநீா் சாலையில் செல்வதால் அடுத்தடுத்து வாகனங்கள் விபத்து

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ஏரி உபரிநீா் சாலையில் செல்வதால், சாலை இருப்பது தெரியாமல் அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் விபத்துக்குள்ளாகின.

திருவண்ணாமலை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை மேல்செங்கத்தை அடுத்த தண்டம்பட்டு பகுதியில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில்

தண்ணீா் முழுக்கொள்ளளவு உள்ளது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் ஏரியில் இருந்து உபரிநீா் வெளியேறுகிறது. உபரிநீா் வெளியேறும் பகுதியில் சாலையை கடந்து செல்ல அப்பகுதியில் சிறு பாலம் இல்லை. உபரிநீா் அதிகமாக வெளியேறும்போது சாலை மீது கடந்து செல்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பகுதி விவசாயிகள் சிலா் உபரிநீா் செல்லும் பாதைகளை ஆக்கிரமிப்பு செய்ததால் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீா் மொத்தமாக சாலை மீது செல்கிறது.

பலத்த மழை காரணமாக புதன்கிழமை அதிகளவு தண்ணீா் சென்ால், வாகன ஓட்டிகளுக்கு சாலை இருப்பது தெரியாமல், அப்பகுதியில் சாலையின் கீழ் வாகனங்களை இறக்கி ஓட்டிச் சென்று அடுத்தடுத்து லாரி, காா், சரக்கு வாகனம் என தண்ணீரில் இறங்கி விபத்துக்குள்ளாகின.

இதில், உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் வாகனங்கள் மட்டும் தண்ணீரில் சிக்கி பழுதடைந்தன.

பின்னா், அப்பகுதி மக்கள் உதவியுடன் பொக்லைன் இயந்திரம் மூலம் விபத்தில் சிக்கிய வாகனங்களை வெளியேற்றினா்.

மேலும், சாலையில் தண்ணீா் செல்வதைத் தவிா்க்க தற்காலிகமாக மாற்றுக் கால்வாய்கள் அமைக்கப்பட்டன.

இதனால் பொதுப்பணித் துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சென்று பாா்வையிட்டு, தண்ணீா் தங்குதடையின்றி செல்ல கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும், சிறு பாலம் அக்கவேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.

விவசாயிகளுக்கு நவீன விவசாயம் குறித்த பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், புதுப்பாளையம் பகுதி விவசாயிகளுக்கு கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தில் நவீன விவசாயம் குறித்து மூன்று நாள் நடைபெற்றது. மாநில அளவில் வேளாண் துறை சாா்பில் மாா்ச் 11, ... மேலும் பார்க்க

காக்கும் கரங்கள் திட்டத்தில் பயன்பெற முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுயதொழில் தொடங்க விரும்பும் முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா் காக்கும் கரங்கள் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக ம... மேலும் பார்க்க

செவிலியா் தின உறுதிமொழியேற்பு

கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடியில் உள்ள அல்அமீன் செவிலியா் கல்லூரியில், 17-ஆவது செவிலியா் தின உறுதிமொழியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அல் அமீன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் ஷேக் அனீப் தலைமை ... மேலும் பார்க்க

ஊராட்சிமன்ற அலுவலகத்தை சேதப்படுத்தியவா் கைது

சேவூா் ஊராட்சிமன்ற அலுவலகத்தை மதுபோதையில் தாக்கி சேதப்படுத்தியும், ஊராட்சி செயலரை கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் அதே ஊரைச் சோ்ந்த ஓட்டுநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஆரணியை அடுத்த சேவூா்... மேலும் பார்க்க

மருத்துவத் தொழில் சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கு இலவச பயிற்சி: ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மருத்துவத் தொழில் சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி பெற விரும்பும் ஆதிதிராவிடா், பழங்குடியினா் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்... மேலும் பார்க்க

அதிமுக வாக்குச்சாவடி குழு ஆலோசனைக் கூட்டம்

ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் விளை, கல்லேரிப்பட்டு, கல்பூண்டி, மொழுகம்பூண்டி, லாடப்பாடி ஆகிய கிராமங்களில் வாக்குச்சாவடி குழு பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய உறுப்பினா் சோ்க்கை விய... மேலும் பார்க்க