ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!!
பங்குச் சந்தை இன்று(மார்ச் 27) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,087.39 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
காலை 11.50 மணியளவில், சென்செக்ஸ் 419.26 புள்ளிகள் அதிகரித்து 77,707.76 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 125.85 புள்ளிகள் உயர்ந்து 23,612.70 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டியில் ஹீரோ மோட்டோகார்ப், எச்டிஎஃப்சி லைஃப், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபின்சர்வ், டிரென்ட் ஆகியவை லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும்.
டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், எச்சிஎல் டெக், ஈச்சர் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.
ஆட்டோ , பார்மா தவிர, மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன.
பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் நிலையாக வர்த்தகமாகின்றன.
கடந்த 7 நாள்கள் பங்குச்சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்த நிலையில் நேற்று(புதன்கிழமை) மட்டும் சரிவில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.