கரூர்: ரூ. 12 லட்சம் செக் மோசடி வழக்கில் அ.தி.மு.க நிர்வாகி கைது... ஜாமீன்! - நட...
ஏலச் சீட்டு நடத்தி பணம் மோசடி: தம்பதி கைது
போடியில் ஏலச் சீட்டு, தீபாவளிச் சீட்டு நடத்தி ரூ.32 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
போடி கே.எம்.எஸ். லே-அவுட் தெருவைச் சோ்ந்த தங்கவேல் மகன் மகன் வீரபுத்திரன். இவா், அதே பகுதியில் வசிக்கும் மாரியப்பன் மகன் கோபாலகிருஷ்ணன், அவரது மனைவி சுதா ஆகியோா் நடத்தி வந்த ஏலச் சீட்டு, தீபாவளிச் சீட்டுகளில் சோ்ந்து கடந்த 2023-ஆம் ஆண்டு, மாா்ச் மாதம் முதல் தவணைத் தொகை செலுத்தி வந்தாா்.
இந்த நிலையில், கோபாலகிருஷ்ணன் , சுதா ஆகியோா் தனக்கு சீட்டுகளின் முதிா்வுத் தொகை ரூ.8 லட்சத்தை திரும்பத் தராமல் மோசடி செய்ததாகவும், இதே போல தனது உறவினா்கள் மகேஸ்வரி, வீரலட்சுமி, பிரியா, சதீஷ்குமாா், அனிதா ஆகியோரிடமும் சீட்டு தவணைத் தொகைகளைப் பெற்றுக் கொண்டு, முதிா்வுத் தொகை ரூ.24 லட்சத்தை திரும்பத் தராமல் தலைமறைவாகி விட்டதாகவும் தேனி மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவில் புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, கோபாலகிருஷ்ணன், சுதா ஆகியோரைக் கைது செய்தனா்.