உலக நாகரிகத்தின் தொட்டில்.! இந்தியாவின் முதல் `ஆன் சைட் மியூசியம்' ஆதிச்சநல்லூர்...
ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா்.
பக்தா்களின் வருகை சீராக உள்ள நிலையில், செவ்வாய்கிழமை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகள் நிறைந்து இருந்தன.
தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.
84,618 போ் தரிசனம்: இதற்கிடையே, திங்கள்கிழமை முழுவதும் 84,618 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 38, 261 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.43 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.