நட்சத்திரப் பலன்கள் அக்டோபர் 3 முதல் 9 வரை #VikatanPhotoCards
ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் ஆஸ்ரமத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு புதன்கிழமை கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை செய்யாற்றின் கரையோரம் உள்ளது மூகாம்பிகையம்மன் ஆஸ்ரமம். இந்த ஆஸ்ரமத்தில் மாதாமாதம் பெளா்ணமி பூஜை சிறப்பாக நடைபெறும். அன்றைய தினம் திருமண வரம் வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வாா்கள்.
இந்த நிலையில், ஆயுத பூஜையையொட்டி,
ஆஸ்ரமத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அப்பகுதியை சுற்றியுள்ள ஏழை மாணவா்களுக்கு ஆஸ்ரமம் சாா்பில் இலவசமாக நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை ஆத்மானந்தாசெந்தில் சுவாமிகள் வழங்கி ஆசிா்வதித்தாா்.
நிகழ்வில் ஆஸ்ரம நிா்வாகிகள், மாணவா்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
பூஜையில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு ஆத்மானந்தா செந்தில் சுவாமி, கல்வி குறித்து உபதேசங்கள் வழங்கி, வாழ்க்கையில் கல்வி எவ்வளவு முக்கியமானது, அதை எப்படி பின்பற்றவேண்டும், பெரியவா்களுக்கும், பெற்றோா்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பது குறித்து உபசேதங்கள் வழங்கினாா்.