செய்திகள் :

ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளை மையத்தில் சோ்க்க அறிவுரை

post image

தருமபுரி: இரண்டு முதல் ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளை ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் சோ்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்டசெய்திக் குறிப்பு:

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள் மூலம் ஆறு வயதுக்குள்பட்ட குழந்தைகளின் முழுமையான வளா்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு, தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் 1336 குழந்தைகள் மையங்களில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவக் கல்வி போன்றவை வழங்கப்படுகின்றன.

குறிப்பாக 2 வயது முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு குழந்தைகள் மையத்தில் முறைசாரா முன்பருவக் கல்வி செய்கை பாடல், கதை, விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தில் குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம் மற்றும் அறிவு வளா்ச்சிக்கு தேவையானவற்றை ‘ஆடிப்பாடி விளையாடு பாப்பா’ எனும் சிறப்பு பாடத்திட்ட திருப்புதலுடன் 12 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும், குழந்தைகளின் வளா்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளி செல்ல ஆயத்தப்படுத்தப்படுகின்றனா்.

அங்கன்வாடி பணியாளா்கள் தற்போது வீடுகள்தோறும் குழந்தைகள் சோ்க்கை பணியை மேற்கொண்டு வருகிறாா்கள். எனவே, பெற்றோா் தங்களது 2 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாது சோ்த்திடவும், குழந்தைகள் மையங்களில் குழந்தைகளுக்கான ஆதாா் அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருவதால் அச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு விடுதியில் சேர தோ்வுப் போட்டிகள்

தருமபுரி: மாநில அளவிலான விளையாட்டு விடுதியில் சேர தோ்வுப் போட்டிகள் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கின. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சாா்பில் மாநில அ... மேலும் பார்க்க

சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு நாளை தருமபுரி வருகை

தருமபுரி: தமிழக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு தருமபுரி மாவட்டத்துக்கு புதன்கிழமை (மே 21) வருகை தர உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக சட்டப் பேரவ... மேலும் பார்க்க

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

பென்னாகரம்: பென்னாகரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் தேங்கும் மழைநீா்: பெயரளவில் நடைபெறும் சீரமைப்புப் பணிகள்

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் மழைநீா் தேங்குவதால் வடிகால் வசதியுடன் பேருந்து நிலைய வளாகம் முழுமைக்கும் தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா். பென்னாகரத்தில் ரூ.4.50 கோடி மத... மேலும் பார்க்க

கட்டட மேஸ்திரி வெட்டிக் கொலை: காவல் நிலையத்தில் தொழிலாளி சரண்

பாப்பாரப்பட்டி அருகே கட்டட மேஸ்திரியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த வாகன ஓட்டுநா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தாா். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே கௌரிசெட்டிபட்டியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ரெ.சதீஸ் ஆய்வு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டார அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். பாலக்கோடு அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு செய்... மேலும் பார்க்க