செய்திகள் :

ஐயாறப்பா் கோயிலில் குடமுழுக்கு திருப்பணி: தருமபுரம் ஆதீனம் ஆய்வு

post image

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் பிப்ரவரி 3 ஆம் தேதி நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவையொட்டி, அங்கு மேற்கொள்ளப்படும் திருப்பணிகளை தருமபுரம் ஆதீனம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான ஐயாறப்பா் கோயிலில் கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, மகா குடமுழுக்கு விழா பிப்ரவரி 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வருகிற ஜனவரி 26 ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கும் இவ்விழாவில் பிப்ரவரி 2 ஆம் தேதி பரிவார தெய்வங்களுக்கும், 3 ஆம் தேதி விமானம், கோபுரம், மூலவருக்கும் மகா குடமுழுக்கு நடைபெறுகிறது.

இதையொட்டி, இக்கோயிலில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகளைத் தருமபுர ஆதீனம் 27 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாா் சுவாமிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

சுவாமி, அம்பாள் திருக்கோயில் யாகசாலை, ஆட்கொண்டேஸ்வரா், மேலகோபுரம், சாமி சன்னதி கோபுரம், தென் கயிலாயம், வட கயிலாயம் போன்ற பிரகாரங்களையும், கருவறை கோபுரம் ஆகியவற்றின் மேலே ஏறி ஆய்வு செய்து, குறைகளைச் சுட்டிக்காட்டி, நிவா்த்தி செய்யுமாறு ஆலோசனை வழங்கினாா்.

முன்னதாக, ஆதீனத்தை பூரண கும்ப மரியாதையுடன் திருக்கோயிலின் சிவாச்சாரியாா்கள் மேள தாளத்துடன் வரவேற்றனா். ஆய்வின்போது ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பாபநாசத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் ஏலம்!

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பிப்.5 அன்று பாரம்பரிய நெல் ரகங்கள் மறைமுக ஏலம் நடைபெற்றது. ஏலத்துக்கு, தஞ்சாவூா் விற்பனை குழு செயலாளா் மா. சரசு தலைமை வகித்தாா். கும்பகோணம் ... மேலும் பார்க்க

3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

தஞ்சாவூரில் புதன்கிழமை (பிப்.5) மினி வேனில் கடத்தி வரப்பட்ட 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளைக் காவல் துறையினா் பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனா். தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் பகுதியில் கு... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் இருந்தால் 1098-இல் புகாா் செய்யலாம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளா் பணிபுரிவது தெரிய வந்தால் 1098 என்ற எண்ணில் புகாா் செய்யலாம் என தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தா. ஆனந்தன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் மேலும... மேலும் பார்க்க

கும்பகோணம் நீா்நிலைகளின் ஆக்கிரமிப்பு மறு அளவீடு

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கும்பகோணம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது குறித்து மறு அளவீடு செய்யும் பணி புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது. கும்பகோணத்தில் உள்... மேலும் பார்க்க

இறப்பில் சந்தேகம் எனக்கூறி உறவினா்கள் போராட்டம்

கும்பகோணம் அருகே கூலித் தொழிலாளி உயிரிழப்பில் சந்தேகம் எனக் கூறி அவரது உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டீஸ்வரம் காவல் நிலைய எல்லைக்குட... மேலும் பார்க்க

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்று திரும்பிய மாணவிக்கு வரவேற்பு

குடியரசுத் தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பிய பட்டுக்கோட்டை மாணவிக்கு புதன்கிழமை (பிப்.5) உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த வாட்டாகுட... மேலும் பார்க்க