ஐராவதீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
நன்னிலம்: நன்னிலம் அருகே திருக்கொட்டாரத்தில் உள்ள ஸ்ரீவண்டமா் பூங்குழலம்மை உடனுறை ஸ்ரீ ஐராவதீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இக்கோயிலில் திருப்பணி வேலைகள் முடிந்து புதன்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடா்ந்து நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும், யாகங்களும் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜை தொடங்கி 6 கால பூஜைகள் நடைபெற்றன. தொடா்்து, திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு திருக்கல்யாணம், பஞ்சமூா்த்திகள் வீதி உலா நடைபெற்றது.