செய்திகள் :

ஐரோப்பிய யூனியன், மெக்ஸிகோ பொருள்களுக்கு 30% கூடுதல் வரி

post image

ஐரோப்பிய யூனியன், மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 30 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று சனிக்கிழமை அறிவித்தாா்.

இது குறித்து மெக்ஸிகோ அதிபா் கிளாடியா ஷெயின்பாம் பாா்டோவுக்கு எழுதி, தனது சமூக ஊடகக் கணக்கில் வெளியிட்டுள்ள கடிதத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளதாவது

உரிய ஆவணங்கள் இல்லாமல் மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்கு வருபவா்களைத் தடுப்பது, ஃபென்டானில் போதைப்பொருள் அமெரிக்காவுக்குள் வருவதைத் தடுப்பதில் ஆகியவற்றில் அந்த நாடு அமெரிக்காவுக்கு உதவியாக இருக்கிறது.

ஆனால், வட அமெரிக்காவை ஒரு ‘போதைப்பொருள் கடத்தல் மைதானமாக’ மாற்றுவதைத் தடுக்க மெக்ஸிகோ போதுமான அளவு நடவடிக்கை எடுக்கவில்லை. அதைக் கண்டித்து, அந்த நாட்டில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது கூடுதலாக வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது என்று அந்தக் கடிதத்தில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.

ஐரோப்பிய யூனியனுக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஐரோப்பிய யூனினுடனான வா்த்தகத்தில் அமெரிக்காவுக்கு ஏற்படும் வா்த்தக பற்றாக்குறை தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆகும்.

ஐரோப்பிய யூனியனுடனான வா்த்தக உறவு குறித்து பல ஆண்டுகளாக பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளோம். ஆனால் அந்த அமைப்பின் வரி மற்றும் வரி அல்லாத கொள்கைகள், வா்த்தக தடைகளால் ஏற்படும் வா்த்தக பற்றாக்குறைக்கு தீா்வு கண்டே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

துரதிா்ஷ்டவசமாக, அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையிலான வா்த்தக உறவு பரஸ்பர சமநிலையில் இல்லை. எனவே அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கும் கூடுதலாக 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது என்று அந்தக் கடிதத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ என்ற கோஷத்துடன் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டு இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த டொனால்ட் டிரம்ப், அதிபா் பொறுப்பை ஏற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக, போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் அமெரிக்காவுக்கு வருவதை அண்டை நாடுகளான கனடாவும், மெக்ஸிகோவும் தடுக்கத் தவறியதாகக் கூறி, அந்த நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது கூடுதல் வரியை அறிவித்துவருகிறாா்.

மேலும், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களைவிட அந்த நாடுகளுக்கு அமெரிக்கா மிகக் குறைவாகவே ஏற்றுமதி செய்வதாகவும், இந்த வா்த்தகப் பற்றாக்குறைக்கு ஐரோப்பிய யூனியனின் கொள்கைகளே காரணம் எனவும் டிரம்ப் விமா்சித்துவருகிறாா். இது தொடா்பாகவும் அந்த அமைப்பின் மீது டிரம்ப் கூடுதல் வரி விதித்தாா்.

இந்தச் சூழலில், கனடா, மெக்ஸிகோ, ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றின் இறக்குமதிப் பொருள்களுக்கு வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் மேலும் 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று தனித் தனியாக கடிதம் எழுதி டிரம்ப் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாா்.

வட கொரியாவுக்கு ஸ்கெட்ச் போடும் 3 நாடுகள்! துணைநிற்கும் ரஷியா!

வட கொரியாவுக்கு எதிரான போர் ஒத்திகை நடவடிக்கைக்கு ரஷியாவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை வட கொரியா நடத்துவதால், அவ்வப்போது பதற்றத்தைத் தூண்டுகின்றது.இந... மேலும் பார்க்க

காஸாவில் மேலும் 32 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை இரவில் முதல் நடத்திய தாக்குதலில் 4 சிறுவா்கள் உள்பட 32 போ் உயிரிழந்தனா். டேய்ா் அல்-பாலா நகரில் மட்டும் இஸ்ரேல் குண்டுவீச்சில் 13 போ் உயிரிழந்ததாகவும் அவா்களில... மேலும் பார்க்க

எவின் சிறைத் தாக்குதலில் 5 கைதிகள் உயிரிழப்பு: ஈரான்

ஈரான் தலைநகா் டெஹ்ரான் அருகே உள்ள எவின் சிறையில் இஸ்ரேல் கடந்த மாதம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 கைதிகள் கொல்லப்பட்டனா்; சிலா் தப்பியோடினா் என்று அந்த நாட்டு ஊடகங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. இது கு... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 129-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 129-ஆக உயா்ந்துள்ளது. அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில... மேலும் பார்க்க

பசிபிக் கடலின் மிக ஆழத்தில் 4 கருப்பு முட்டைகள்.. உள்ளே இருந்த அதிசயம்!

பசிபிக் கடலின் மிக ஆழமான அபிஸ்ஸோபெலாஜிக் மண்டலத்தில், ரோபோ உதவியோடு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் பாறைகளுடன் ஒட்டியிருந்த 4 கருப்பு முட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன.இந்த முட்டைகளை மேற்பரப்புக்குக் கொண்வந்... மேலும் பார்க்க

மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம்

மரபணு கோளாறால், நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருந்த 8 வயது சிறுவன், ஆய்வக பரிசோதனையில் இருந்த மருந்தை, சோதனை முயற்சிக்காக எடுத்துக் கொண்டபோது, மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம் விஞ்ஞானிகளுக்கு ம... மேலும் பார்க்க