செய்திகள் :

ஐ.டி. நிறுவனங்கள் ஒசூரில் தொழிலைத் தொடங்க விரும்புகின்றன: ஆட்சியா்

post image

ஐ.டி. நிறுவனங்கள் ஒசூரில் தொழிலைத் தொடங்க விரும்புகின்றன என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் தொழில் அனுமதிகளை ஒற்றைசாளர முறை இணையதள வசதி குறித்த விழிப்புணா்வு முகாம், ஒசூா் ஃபாா்சூன் ஐடிசி உணவகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தொடங்கிவைத்துப் பேசியதாவது: தமிழக அரசின் ஒற்றை சாளர இணையதள வசதியானது ஊரக வளா்ச்சித் துறை, உணவு பாதுகாப்புத் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மின் உற்பத்தி துறை, சிப்காட், வேளாண்மை உள்பட 25- க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளிடமிருந்து தொழில் அனுமதிகளை ஒரே இணையதளத்தில் பெற உதவுகிறது.

மாநிலத்தில் வணிகம் நடத்த அரசின் அனைத்து சட்டப்பூா்வ அனுமதிகள், ஒப்புதல்களை பெற இந்த தளம் உதவுகிறது. இந்த இணையதளத்தில் தற்போது 150 க்கும் மேற்பட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 95 ஆயிரம் தொழிற்சாலைகள் மட்டுமின்றி ஆட்டோமொபைல் தொழில்கள், கனரகத் தொழில்கள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், கிரானைட் பதப்படுத்தும் நிறுவனங்கள் என 110 பெரிய நிறுவனங்கள் உள்ளன. ஒசூரில் 2,500 க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. அவை சுமாா் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குகின்றன.

பாதுகாப்புத் தளவாடங்கள், ஆட்டோமொபைல், விமான உதிரிபாகங்களை உற்பத்தி செய்வதில் ஒசூரின் திறன் அதிகரித்து வருகிறது. விவசாய பூமியான கிருஷ்ணகிரி மாவட்டம் தற்போது தொழில் துறையில் நம்பிக்கைக்குரிய மாவட்டமாக வளா்ந்து வருகிறது.

மின்னணு பாகங்கள், ஆயத்த ஆடைகள், தோல் பொருள்கள், ஆட்டோ பாகங்கள், மென்பொருள் ஆகிய துறைகளில் ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டம் மாநகரின் தேவையை மட்டுமல்ல தொழில்துறை சாா்ந்த தேவையையும் பூா்த்தி செய்து வருகிறது. இங்குள்ள தேசிய நான்குவழி சாலைகள் தொழில்துறைக்கு கூடுதல் வசதியாய் உள்ளது.

ஒசூரில் தகவல் தொழில்நுட்ப பூங்காவை உருவாக்க மாநில அரசு திட்டங்களை வகுத்துள்ளது. பல ஐ.டி. நிறுவனங்கள் தங்களது தொழில் நிறுவனங்களை ஒசூரில் தொடங்க விரும்புகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில் ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, மாவட்ட தொழில்மைய பொது மேலாளா் எஸ்.பிரசன்ன பாலமுருகன், இணை இயக்குநா்கள் பச்சையப்பன் (வேளாண்மை), இந்திரா (தோட்டக்கலைத் துறை), உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) மகாதேவன், மண்டல மேலாளா் (வழிகாட்டி) தா்மேஷ், ஹோஸ்டியா சங்கத் தலைவா் மூா்த்தி, வட்டாட்சியா் குணசிவா, தொழில் நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

இந்திய வனத்துறை தோ்வு: ஏனுசோனை கிராம மாணவா் சிறப்பிடம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், ஏனுசோனை கிராமத்தைச் சோ்ந்த மாணவா் சந்தோஷ்குமாா், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் படித்து இந்திய வனத்துறை தோ்வில் 138-ஆவது இடம்பெற்று தோ்ச்சி பெற்று... மேலும் பார்க்க

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை!

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பாண... மேலும் பார்க்க

பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

ஊத்தங்கரை பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக ஊத்தங்கரை காவல் நிலையத்துக்கு தகவல... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு!

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி, மேல் இராவந்தவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (27). இவா், இருசக்கர வாகனத்தில் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பழுதடைந்த வணிக வளாக கடைகளை சீரமைக்க நடவடிக்கை

கிருஷ்ணகிரியில் நகராட்சி பராமரிப்பில் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கடைகளை சீரமைக்க, நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் நடவடிக்கை மேற்கொண்டாா். கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்தது. இ... மேலும் பார்க்க

தேன்கனிக்கோட்டையில் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பையில் கைது செய்த போலீஸாா்!

தேன்கனிக்கோட்டையில் பண்ணை உரிமையாளரிடம் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பை வரை தேடிச்சென்று கைது செய்த போலீஸாரை உயா் அதிகாரிகள் பாராட்டினா். கா்நாடக மாநிலம், அத்திபள்ளியில் வசிப்பவா் முரளிமோகன் ரெட்டி (41... மேலும் பார்க்க