செய்திகள் :

ஐ. பெரியசாமி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம்!

post image

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ. பெரியசாமி விடுவிப்பை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை, மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பாதுகாவலராக வேலை செய்த காவல்துறை அதிகாரி கணேசனுக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு முறைகேடாக ஒதுக்கியதாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக தற்போது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகிக்கும் ஐ.பெரியசாமிக்கு எதிராக, கடந்த 2012-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் சிறப்பு நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறுவிசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கில் அமைச்சர் ஐ. பெரியசாமி விடுவிக்கப்பட்டது செல்லாது என்றும் இந்த வழக்கை மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக அமைச்சர் ஐ. பெரியசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா தலைமையிலான அமர்வில் இன்று(ஆக. 18) விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத் துறை இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

இதன் மூலமாக ஐ.பெரியசாமி வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

Supreme Court imposed an interim stay on the Madras High Court order quashing the acquittal of Minister I. Periyasamy in the disproportionate assets case.

தவெக மாநாட்டில் பிளக்ஸ் பேனர் வைக்க முயன்ற மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இனாம்கரிசல் குளத்தில் தவெக மாநாட்டிற்கு பிளக்ஸ் பேனர் வைப்பதற்காகக் கம்பி எடுத்து வந்தபோது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவ... மேலும் பார்க்க

50 ஆம் ஆண்டு திருமண நாள்! மனைவி துர்காவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

50 ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி, மனைவி துர்காவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.திருமண நாளை முன்னிட்டு மறைந்த திமுக தலைவரும் தனது தந்தையுமான மு. கருணாநிதியின் நின... மேலும் பார்க்க

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(ஆகஸ்ட் 20) காலை 8.00 மணியளவில் அதன் முழு க... மேலும் பார்க்க

தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது: உயர் நீதிமன்றம்

சென்னை: சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் வகையில் மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.சென்னை மாநகராட்சியின், ... மேலும் பார்க்க

சிறுவன் பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறை!

ஆவடி அருகே 7 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தும் புதன்கிழமை திருவள்ளூர் மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.திருவள்... மேலும் பார்க்க

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிக நீக்கம்!

மதிமுக துணை பொதுச் செயலாளர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்குவதாக அந்த கட்சியின் தலைவர் வைகோ அறிவித்துள்ளார்.மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவ... மேலும் பார்க்க