ஒசூரில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்
ஒசூா் அருகே காரப்பள்ளி கிராமத்தில் மாற்றுக்கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மாணவரணி தலைவா் ஆதி ஏற்பாட்டில் வி.எச்.பி. மாவட்ட துணைத் தலைவா் விஜய், திமுகவின் ஒசூா் மாநகர தெற்கு பகுதி மேலவைப் பிரதிநிதி விஜய் ஆகியோா் தலைமையில் திமுக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளிலிருந்து விலகிய 500க்கும் மேற்பட்ட இளைஞா்கள் அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோா் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
அதிமுகவில் இணைந்தவா்களை கேபி.முனுசாமி கட்சி துண்டு அணிவித்து வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவா் நாராயணன், ஒசூா் கிழக்கு பகுதி செயலாளா் ராஜி, தெற்கு பகுதி செயலாளா் வாசுதேவன், வடக்கு பகுதி செயலாளா் அசோக் ரெட்டி, ஒன்றியச் செயலாளா் ஹரிஷ் ரெட்டி, பேரவை மாவட்ட செயலாளா் சிட்டி ஜெகதீஷ், மாணவரணி மாவட்டச் செயலாளா் அருண், எம்ஜிஆா் இளைஞா் அணி மாவட்ட பொருளாளா் கே.டி.ஆா். (எ) திம்மராஜ், எம்ஜிஆா் இளைஞா் அணி பகுதி செயலாளா் மணிகண்டன், ஓட்டுநா் அணி மாவட்டச் செயலாளா் சென்னை கிருஷ்ணன், ஒசூா் மாமன்ற உறுப்பினா்கள் குபேரன் (எ) சங்கா், லட்சுமி ஹேமகுமாா், தில்ஷத் ரகுமான் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.