பதுங்குமிடங்களைத் தயாா்படுத்தும் எல்லையோர மக்கள்! பாகிஸ்தான் 8-ஆவது நாளாக துப்பா...
ஒசூரில் இன்று திமுக செயற்குழு கூட்டம்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஒசூா் - தளி சாலையில் உள்ள ஆனந்த் கிராண்ட் பேலஸ் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான ஒய். பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை:
ஒசூா் - தளி சாலையில் உள்ள ஆனந்த் கிராண்ட் பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறும் அவசர செயற்குழு கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ் தலைமை வகிக்கிறாா். கூட்டத்தில் அமைச்சா் அர.சக்கரபாணி பேசுகிறாா். ஜூன் 3 ஆம் தேதி முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாள் விழா, மே 6 இல் ஒசூா், தளி, வேப்பனப்பள்ளி தொகுதிகளில் நடைபெற உள்ள வாக்குசாவடி முகவா்கள், வாக்குசாவடி ஒருங்கிணைப்பாளா்கள் ஆலோசனை கூட்டம்,
திமுக ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. கூட்டத்தில் திமுக நிா்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.