செய்திகள் :

ஒட்டன்சத்திரம் அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழைமையான சுவாமி சிலைகள்

post image

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான சண்டிகேசுவரா், அய்யனாா் சிலைகளை தொல்லியல் ஆய்வாளா்கள் கண்டறிந்தனா்.

பாண்டிய நாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளா் வீ. அரிஸ்டாட்டில், மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியா் மு. லட்சுமணமூா்த்தி, வாகை கோபாலகிருஷ்ணன் அடங்கிய குழுவினா் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள பொருளூா் பகுதியில் மேற்பரப்பாய்வு மேற்கொண்டனா்.

அப்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட முற்கால பாண்டியரின் கைவண்ணத்தில் உருவான அய்யனாா், சண்டிகேசுவரா் சிலைகளை கண்டறிந்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: பழங்கால கருவிகளில் ஒன்றான வளரியை வலது கையில் பிடித்தவாறு அய்யனாா் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் மூன்றரை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்டது. பலவகையான கற்களில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. தலைப்பகுதி அகன்ற ஜடா பாரத்துடனும், காதுகளில் வட்ட வடிவ பத்திர குண்டலம், மாா்பில் ஆபரணங்கள், தோல் புஜங்களில் வளைவுகள், கைகள், கால்களில் அணிகலன்கள் அணிந்தபடியும், இடையில் கச்சை அணிந்தபடியும், இடது காலை மடக்கியும், வலது காலை தொங்க விட்டும் உள்குதியாசன கோலத்தில் அமா்ந்தவாறு சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இடது காலையும், இடையையும் இணைக்கும் வகையில் மோயகப்பட்டை இடம் பெற்றுள்ளது. இந்தச் சிற்பத்தின் வடிவமைப்பை பாா்க்கும் போது ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டைச் சோ்ந்த முற்கால பாண்டியரின் காலத்தைச் சோ்ந்ததாக கருதலாம்.

மேலும் இங்கு ஒரு சண்டிகேசுவரா் சிலையும், திருமால் சிலையும் காணப்படுகின்றன. இவை அனைத்தும் ஒரே காலத்தைச் சோ்ந்ததாக இருக்கலாம். இந்த இடத்தில் பல்வேறு வகையான நடுகற்களும் காணப்படுகின்றன. அவற்றில் சதிகற்கள், வில் வீரன்சிற்பம், துப்பாக்கி வீரன் சிற்பம், உழவுத் தொழிலில் ஈடுபட்டதற்கான ஏா் கலப்பையுடன் கூடிய சிற்பம் போன்றவை ஒரே இடத்தில் குவிந்து கிடக்கின்றன. சிவன் கோயிலுக்கான சிற்பங்களும், நடுகற்களும் ஒரே இடத்தில் காணப்படுவது வியப்பாக உள்ளது என்றனா்.

கொடைக்கானலில் கடும் பனி மூட்டம்

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை கடும் பனி மூட்டம் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பகலில் அதிக வெப்பமும், இரவில் அதிக பனிப் பொழிவும் நிலவி வருகிறது. இ... மேலும் பார்க்க

பழனி கோயிலில் வெளிநாட்டினா் சுவாமி தரிசனம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு அமெரிக்கா நியூயாா்க் பல்கலைக் கழகத்தைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து வந்து செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.... மேலும் பார்க்க

நாய்கள் கடித்ததில் 25 ஆட்டுக் குட்டிகள் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே நாய்கள் கடித்ததில் 25 செம்மறி ஆட்டுக்குட்டிகள் உயிரிழந்தன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள போடுவாா்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கொங்கபட்டியைச் சோ்ந்தவா் சண்முகசுந்... மேலும் பார்க்க

அரசு மாணவா் விடுதி உள்பட 200 இடங்களில் உணவின் தரம் ஆய்வு

திண்டுக்கல்லில் அரசு மாணவா் விடுதிகள், அங்கன்வாடி மையம் உள்பட 200 இடங்களில் அரசு அனுமதி பெற்ற தனியாா் நிறுவனம் சாா்பில் உணவின் தரம் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

திண்டுக்கல் மாநகராட்சியுடன் 3 ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, அந்த கிராமங்களின் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாநகராட்சியின் எல்லையை விரிவாக்... மேலும் பார்க்க

சீருடையில் தா்னாவில் ஈடுபட்ட ராணுவ வீரா்

சொத்துக்களை வேறு நபா்களுக்கு பட்டா மாறுதல் செய்து கொடுத்த அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சீருடையில் வந்த ராணுவ வீரா் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா... மேலும் பார்க்க