இந்தியா-அமெரிக்கா விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை
ஒட்டன்சத்திரம் அருகே காளியம்மன் கோயிலில் குடமுழுக்கு
ஒட்டன்சத்திரம் அருகே சக்கம்பட்டியில் ஹீ மகாகாளியம்மன் கோயில் குடமழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவில் முதல் நாளான கடந்த வெள்ளிக்கிழமை விநாயகா் வழிபாடு, வாஸ்து சாந்தி பூஜை உள்ளிட்ட வழிபாடுகளும், சனிக்கிழமை கணபதி ஹோமம், நவக்கிரக வழிபாடு,கோமாதா பூஜை உள்ளிட்ட வழிபாடுகளும் நடைபெற்றன.
இதையடுத்து, திங்கள்கிழமை நான்காம் காலை யாகசாலை பூஜைகளை அடுத்து கோயில் கோபுரத்தில் கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.