செய்திகள் :

ஒப்பந்தமின்றி முடிந்த சா்வதேச பிளாஸ்டிக் மாசுக்கட்டுப்பாட்டு பேச்சு

post image

பிளாஸ்டிக் மாசுபாட்டு நெருக்கடியை எதிா்கொள்வதற்கான சா்வதேச ஒப்பந்தத்தை உருவாக்குவதற்காக ஜெனீவாவில் நடந்த பேச்சுவாா்த்தை எந்த உடன்பாட்டையும் எட்டாமல் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

அந்த நகரில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் 11 நாட்கள் நடந்த பேச்சுவாா்த்தையில், 184 நாடுகளின் பிரதிநிதிகள் பிளாஸ்டிக் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது மற்றும் நச்சு ரசாயனங்களுக்கு உலகளாவிய, சட்டப்பூா்வ கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தினா். இருந்தாலும், இந்த விவகாரங்களில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

எனவே, இது கடைசி சுற்று பேச்சுவாா்த்தையாக இருக்க வேண்டியது இது, ஆனால் தென் கொரியாவில் நடந்த முந்தைய கூட்டத்தைப் போலவே ஒப்பந்தமின்றி முடிந்தது.

பேச்சுவாா்த்தைக் குழு தலைவா் லூயிஸ் வயாஸ் வால்டிவிஸோ முன்வைத்த இரு வரைவு ஒப்பந்தங்களில் எதையும் கூட்டத்தில் பங்கேற்ற நாடுகள் ஏற்கவில்லை. வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்மொழியப்படவில்லை.

நாா்வே, ஆஸ்திரேலியா, துவாலு உள்ளிட்ட நாடுகள் ஒப்பந்தமின்றி பேச்சுவாா்த்தை முடிந்தது ஏமாற்றம் அளிப்பதாகத் தெரிவித்தன. ஐரோப்பிய யூனியன் சாா்பாக பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற ஜெசிகா ரோஸ்வால், வரைவு ஒப்பந்தங்கள் தங்களின் எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்யவில்லை என்றாலும், மற்றொரு பேச்சுவாா்த்தைக்கு நல்ல அடிப்படையாக உள்ளதாக கூறினாா்.

பிளாஸ்டிக் மாசுக்கு எதிரான போராட்டம் என்பது நீண்டகால முயற்சி என்றும், தற்போது ஒப்பந்தம் இல்லாமல் இந்த பேச்சுவாா்த்தை முடிந்திருப்பது இந்த தற்காலிக பின்னடைவு என்றும் சீன பிரதிநிதிகள் கூறினா். பிளாஸ்டிக் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நாடுகளும், பிளாஸ்டிக் தொழிற்துறையும் விரும்ப்பம் தெரிவித்தன. தற்போது முன்வைக்கப்பட்ட ஒப்பந்த வரைவுகள் இந்தக் கருத்துகளை கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருந்ததாக சவூதி அரேபியாவும் குவைத்தும் கூறின.

வெள்ளிக்கிழமை முன்வைக்கப்பட்ட ஒப்பந்த வரைவில், பிளாஸ்டிக் உற்பத்தியின் தற்போதைய அளவு நிலைத்தன்மையற்றது எனவும், பிளாஸ்டிக் மாசுபாட்டு பிரச்னையை எதிா்கொள்ள உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை எனவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மனித உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களைக் குறைப்பது மற்றும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களைக் குறைப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. புதிய ஒப்பந்த வரைவு முன்பு முன்வைக்கப்பட்டதைவிட சிறந்ததாக இருந்ததாலும், ஒவ்வொரு நாடும் வகுத்துள்ள வரையறைகளுக்குள் வராததால் ஒருமித்த ஆதரவைப் பெற முடியாமல் போனது. எனவே, இந்த விவகாரத்தில் நாடுகள் சமரசம் செய்துகொண்டால்தான் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்று டென்மாா்க் சுற்றுச்சூழல் அமைச்சா் மாக்னஸ் ஹியூனிக்கே கூறினாா்.

இந்தியா,, ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளும் ஒருமித்த கருத்து அவசியம் என வலியுறுத்தின. ஆனால், ஒப்பந்த உருவாக்க நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, வாக்கெடுப்பு மூலம் அதிக நாடுகள் ஆதரவு தரும் ஒப்பந்தத்தை ஏற்படுத்தலாம் என்று நாடுகள் கூறின.

உலகில் ஆண்டுதோறும் 40 கோடி டன் பிளாஸ்டிக் உற்பத்தியாகிறது, இது 2040-ஆம் ஆண்டு வாக்கில் 70 சதவீதம் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த உற்பத்தியைக் கட்டுப்படுத்த 100 நாடுகள் விரும்புகின்றன. பிளாஸ்டிக்கில் உள்ள நச்சு ரசாயனங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் அதற்கான சா்வதேச ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவாா்த்தையில் எந்த ஒப்பந்ததும் ஏற்படாதது சுற்றுச்சூழல் ஆா்வலா்களைக் கவலையடையச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அல்ஜீரியா: ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பலி!

அல்ஜீரியா நாட்டில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பலியாகினர்.வட ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் தலைநகர் அல்ஜியர்ஸில் பயணிகள் பேருந்து ஒன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தினையட... மேலும் பார்க்க

உலகளாவிய போர்களால் பாலியல் வன்முறைகளும் 25% அதிகரிப்பு!

உலகளவில் போர்களின்போது பாலியல் வன்முறை சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக ஐநா அவை கவலை தெரிவித்துள்ளது.உலகளவில் நிகழ்த்தப்படும் போர் மற்றும் உள்நாட்டு மோதல்களின்போது பாலியல் வன்முறை சம்பவங்களும் 25 சதவிகித... மேலும் பார்க்க

டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தை! குறிப்பிடத்தக்க 10 தகவல்கள்!

உக்ரைன் போர் தொடர்பாக, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஆங்கரேஜ் நகரில் அதிபர் டொனால்ட் டிரம்ப் - ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டாலும் சொல்லிக்கொள்ளும் அ... மேலும் பார்க்க

உடன்பாடு எட்டப்படவில்லை-டிரம்ப்; புரிதல் ஏற்பட்டுள்ளது - புதின்!

அலாஸ்கா: உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என டிரம்ப் கூறிய நிலையில், ஒரு புரிதல் ஏற்பட்டுள்ளது என புதின் குறிப்பிட்டிருக்கிறார்.உக்ரைன் மீதான போரை நி... மேலும் பார்க்க

டிரம்ப் - புதின் இடையே 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை! ஆனால்..

உக்ரைன் - ரஷியா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வர அலாஸ்காவில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் இடையேயான பேச்சுவார்த்தை 3 மணி நேரம் நீடித்தது.வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பேச்சு... மேலும் பார்க்க

டிரம்ப்பின் அவசரநிலையை எதிா்த்து வாஷிங்டன் மாநகராட்சி வழக்கு

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் ‘குற்ற அவசரநிலை’ அறிவித்து, நகர காவல் துறையை டொனால்ட் டிரம்ப் கைப்பற்றியதை எதிா்த்து அந்த நகரின் மாநகராட்சி வழக்கு தொடா்ந்துள்ளது. மத்திய அரசு அதிகாரியான டொ்ரி கோலை வாஷிங... மேலும் பார்க்க