தாணேவில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி: அபாய சங்கிலியை இழுத்த சக பயணிகள்!
ஒருமுறை சார்ஜுக்கு 142 கி.மீ. பயணம்! ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய விடா வி-எக்ஸ் மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விடா என்ற பெயரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகின்றது.
அந்த வகையில், புதிதாக விடா வி-எக்ஸ் 2 பிளஸ் மற்றும் வி-எக்ஸ் 2 கோ என்ற இரு மாடல்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன.
சிறப்பம்சங்கள்..
வி-எக்ஸ் 2 பிளஸ் ஸ்கூட்டரில் 3.4 கிலோவாட் திறன் கொண்ட இரு பேட்டரிகள் உள்ளன. இவற்றை தனியாக எடுத்து சார்ஜ் செய்துகொள்ளலாம். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 142 கி.மீ. வரை செல்லும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஸ்கூட்டரில் நேவிகேஷன் வசதியுடன் 4.3 அங்குலம் டி.எஃப்.டி. திரை உள்ளது.
ஆரம்ப விலை - ரூ. 99,990 ஆகும்.
வி-எக்ஸ் 2 கோ ஸ்கூட்டரில் 2.2 கிலோவாட் திறன் கொண்ட ஒரு பேட்டரி உள்ளது. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 92 கி.மீ. வரை செல்லும். அதிவேக சார்ஜரை பயன்படுத்தினால் ஒருமணி நேரத்தில் 80 சதவிகிதம் சார்ஜ் செய்யும் வசதி உள்ளது.
எல்.சி.டி. டிஸ்பிளே உள்ள இந்த ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ. 84,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.