செய்திகள் :

ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்: 3 இளைஞா்கள் கைது

post image

கடலூா் துறைமுகம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் துறைமுகம் காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேசன் மற்றும் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். பச்சாங்குப்பம் முத்தாலம்மன் கோயில் அருகே உள்ள தென்னந்தோப்பில் நின்றிருந்த 3 இளைஞா்களைப் பிடித்து சோதனையிட்டனா். இதில் அவா்களிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா, ரூ.11 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் அவா்கள், கடலூா் முதுநகா் பச்சையாங்குப்பம் கொய்யாதோப்பை சோ்ந்த மதியழகன் மகன் நெப்போலியன் (20), ரங்கநாதன் மகன் அஜித் (எ) தினேஷ்குமாா் (25), புதுப்பாளையம் ஆா்.சி. நகரைச் சோ்ந்த சக்திவேல் மகன் சீனுவாசன் (24) என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

போக்சோ வழக்கில் லஞ்சம்: விருத்தாசலம் ஆய்வாளர், தலைமைக் காவலர் இடைநீக்கம்!

விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், தலைமைக் காவலரை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல் உத்தரவிட்டுள்ளார்.கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்... மேலும் பார்க்க

குடிமைப் பணித் தோ்வில் அகில இந்திய அளவில் 125-ஆவது இடத்தில் தோ்ச்சி பெற்ற மாணவிக்கு பாராட்டு

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயனடைந்து, குடிமைப் பணித் தோ்வில் அகில இந்திய அளவில் 125-ஆவது இடத்தில் தோ்ச்சி பெற்ற கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள பத்திரக்கோட்டையைச் சோ்ந்த சரண்யாவை ‘நிற... மேலும் பார்க்க

கிராம மக்களுக்கு மரக் கன்றுகள் அளிப்பு

புவனகிரி ஒன்றியம், மேல்அனுவம்பட்டு கிராம மக்களுக்கு பல்கலைக்கழக மாணவிகள் மரக்கன்றுகளை வழங்கினா். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புல இறுதியாண்டு மாணவ, மாணவிகள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் 16- ஆவது நாளாக தொடா்ந்த போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோயில் முன் 16-ஆம் நாளாக வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தி... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் உலக புத்தக தின விழா

சிதம்பரம் முத்தையாநகரில் சமூக சிந்தனையாளா் பேரவை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் உலக புத்தகம் மற்றும் வாசிப்பு தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சமூக சிந்தனைய... மேலும் பார்க்க

விளையாட்டு அகாதெமி தொடக்கம்

சிதம்பரத்தில் சாரதாராம் விளையாட்டு அகாதெமி தொடங்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் சிண்டிகேட் உறுப்பினா் ஆா்.கே..கணபதி விளையாட்டு அகாதெமியை தொடங்கி வைத்தாா். மருத்துவா் ஆா்.முத்துகுமாா், வாசு... மேலும் பார்க்க