10 -ஆம் வகுப்பு தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 98.31 சதவீதம் போ் தோ்ச்சி
`ஒரு நாளைக்கு மூன்று முறை இதனை சாப்பிடுவேன்..'- தேநீர் பைகளை உட்கொள்ளும் இளம்பெண்!
சைப்ரஸின் லிமாசோலைச் சேர்ந்த பெண் ஒருவர் விசித்திரமான பழக்கங்களால் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளார்.
தேநீர் பிரியர்கள் தேநீர் மீதான தங்களின் ஈர்ப்பை எப்படி எல்லாம் வெளிப்படுத்துவார்கள், ஒரு நாளைக்கு அளவு அதிகமான தேநீர் குடிப்பது, கோடைகாலத்திலும் தேநீரை சுவைத்து அருந்துவது என அதன் ஈர்ப்பு பற்றி முடிவில்லாமல் பேச முடியும், லியுபோவ் சிரிக் என்பவர் ஒரு படி மேலே சென்று தேநீர் பைகளையும் தேநீர் இலைகளையும் சாப்பிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
20 வயதாகும் இவர் தேநீர் அருந்திய பிறகு அந்த தேநீர் பைகள் அல்லது தேநீர் இலைகளை அப்படியே சாப்பிட விரும்புகிறார்..

ஒரு நாளைக்கு இரண்டு முறை தேநீர் இலைகளை சாப்பிடுவதாகவும், வாரத்திற்கு மூன்று முறையாவது காகித தேநீர் பைகளை உட்கொள்கிறார் என்றும் நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து லியுபோவ் சிரிக் கூறுகையில், “முதலில் எனது பாட்டி புதினா இலைகளை சாப்பிட பரிந்துரைத்தார் அப்போது எனக்கு 14 வயது! அந்த சுவை எனக்கு மிகவும் பிடித்தது. பின்னர் அவர் தேயிலை இலைகளை சாப்பிட ஆரம்பித்தார்.
அந்த சுவையும் எனக்கு பிடித்து விட்டது. பின்னர் மெதுவாக அது எனக்கு பழக்கமாகிவிட்டது. ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு கப் தேநீர் குடிப்பேன், குறைந்தது இரண்டு இலைகளையாவது சாப்பிடுவேன்.
மற்றவர்கள் பயன்படுத்திய தேநீர் பைகளை கூட நான் சாப்பிடுவேன். என்னுடன் நெருக்கமாக இருக்கும் தோழிகளுக்கு நான் இதை செய்வேன் என்று தெரியும். நான் தேநீர் பைகள் சாப்பிடுவதை நிறுத்த விரும்புகிறேன். ஆனால் ஒருபோதும் தேநீர் இலைகளை கைவிடமாட்டேன்" என்றும் கூறுகிறார் லியுபோவ் சிரிக்.
உடல்நல அபாயங்களை தவிர்க்க ஆர்கானிக் தேநீர் பைகளை மட்டுமே சாப்பிடுவதாக லியுபோவ் சிரிக் கூறியதாக SWNS செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விசித்திரமான பழக்கத்தை வீடியோவாகவும் பதிவேற்றுள்ளார். அதுதான் தற்போது வைரலாகி வருகிறது.