செய்திகள் :

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ மசோதாக்கள்: நாடாளுமன்றக் குழு பதவிக்காலம் நீட்டிப்பு

post image

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ நடைமுறையை அமல்படுத்துவதற்கான இரு மசோதாக்களை ஆராய்ந்துவரும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக் காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களவை, மாநிலப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கு வழிவகுக்கும் அரசமைப்புச் சட்ட 129-ஆவது திருத்த மசோதா, மக்களவைத் தோ்தலுடன் யூனியன் பிரதேசங்களின் பேரவைத் தோ்தலையும் சோ்த்து நடத்துவதற்கான சட்டத் திருத்த மசோதா ஆகியவை, கடந்த 2024-ஆம் ஆண்டில் எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

பின்னா், பாஜக எம்.பி. பி.பி. செளதரி தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு இரு மசோதாக்களும் அனுப்பப்பட்டன.

தற்போது மழைக்கால கூட்டத் தொடா் நடைபெற்றுவரும் நிலையில், கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை நடப்பாண்டு இறுதியில் நடைபெறும் குளிா்கால கூட்டத் தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாள் வரை நீட்டிக்கும் தீா்மானத்தை பி.பி.செளதரி மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா். இத்தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, மசோதா மீது அறிக்கை தாக்கல் செய்ய குளிா்கால கூட்டத் தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாள் வரை கூட்டுக் குழுவுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம், மத்திய பாஜக அரசின் கொள்கையின் ஓா் அங்கமாக உள்ளது. இத்திட்டத்துக்கான சாத்தியக்கூறு குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயா்நிலைக் குழுவை கடந்த 2023-இல் மத்திய அமைத்தது. பல்வேறு தரப்பினரிடம் விரிவான ஆலோசனை மேற்கொண்ட இக்குழு, தனது அறிக்கையை மத்திய அரசிடம் கடந்த 2024-இல் தாக்கல் செய்தது. அதனடிப்படையில், இரு மசோதாக்கள் தயாரிக்கப்பட்டு, மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

உத்தரகண்டில் சாலையின் நடுவில் நிலச்சரிவு! 2 பேர் மாயம்... 2 பேர் படுகாயம்!

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் - நீல்காந்த் சாலையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் மாயமாகியுள்ளனர்.உத்தரகண்டில் கடந்த சில வாரங்களாகவே கனமழை பெய்து வருவதால், அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில், பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரின் மன்பூர்-மொஹ்லா-அம்பாகார் சௌக்கி மாவட்டத்தின் மதன்வா... மேலும் பார்க்க

நடப்பு நிதியாண்டில் 10,660 கி.மீ. நெடுஞ்சாலை: அமைச்சர்

நடப்பு நிதியாண்டில் மட்டும் 10,660 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் அஜய் தம்தா தெரிவித்துள்ளார். 2025–26 நிதியாண்டில் 10 ஆயிரம் கி.ம... மேலும் பார்க்க

ஆக.21 மாஸ்கோவில்.. ரஷியா - இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வரும் ஆக.21 ஆம் தேதியன்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து உரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரஷியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும்... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு சிங்பம் மாவட்டத்தில், துகுனியா, பொசைடா மற்றும்... மேலும் பார்க்க

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி: ராகுல் கிண்டல்!

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்தமைக்கு தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற... மேலும் பார்க்க