ஒரே போட்டி.. பல சாதனைகள் படைத்த விராட் கோலி!
ஒரே போட்டியில் விராட் கோலி பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரராக மாறியுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின.
முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 264 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதன்பின்னர் 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்தப் போட்டியில் பேட்டிங் செய்த விராட் கோலி நிதானமாக விளையாடி 84 ரன்கள் சேர்த்து ஆடம் ஸாம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டியில் விராட் கோலி படைத்த சாதனைகள்
ஐசிசி தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் 1000 ரன்களை கடந்த முதல் வீரர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் - 735 ரன்கள்(ஷிகார் தவான் -701 ரன்கள்)
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் - 336 கேட்ச்கள்.
ஐசிசி ஒருநாள் போட்டிகளில் அதிக அரைசதம் - 24 அரைசதங்கள்
ஐசிசி ஒருநாள் நாக் அவுட் போட்டிகளில் அதிக அரைசதங்கள் - 5 (முதலிடத்தில் சச்சின் - 6 அரைசதங்கள்)