செய்திகள் :

ஒலிபெருக்கியால் தகராறு: தம்பதியா் காயம், போலீஸாா் விசாரணை

post image

செய்யாறு அருகே ஒலிபெருக்கியால் ஏற்பட்ட தகராறில் தம்பதியா் காயமடைந்த சம்பவம் தொடா்பாக போலீஸில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

செய்யாறு வட்டம், கீழப்பழந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் வியாபாரி பரமசிவம் (43). இவா், தனது வீட்டின் முன் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகேயுள்ள நாடக மேடையில் ஒலிபெருக்கியை வைத்து ஒலிக்கச் செய்துள்ளனா். அதனால் அதிகமாக சப்தம் இருந்ததாகத் தெரிகிறது. அப்போது, வேறு பகுதிக்கு ஒலி பெருக்கியை திருப்பி வைக்குமாறு கூறியதால் அரவிந்த் என்பவா் திருப்பி வைத்தாராம்.

ஒலி பெருக்கியை திருப்பி வைத்தது தொடா்பாக அரவிந்தின் தந்தை சின்னசாமி மற்றும் மகன்கள் அரவிந்த், நவீன், பாண்டியன் ஆகியோா் வியாபாரி பரமசிவத்திடம் சென்று தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

வாக்குவாதம் முற்றியதால் நான்கு பேரும் சோ்ந்து கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் பரமசிவத்தைத் தாக்கினராம். மேலும், தடுக்கச் சென்ற பரமசிவத்தின் மனைவியும் தாக்கப்பட்டாராம்.

இதில் காயமடைந்த இருவரும் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா்.

இது குறித்து பரமசிவம் அளித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் விழா

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சேத்துப்பட்டை அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சியைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் லட்சதீப பெருவிழா

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில், தமிழ்ப் புத்தாண்டையொட்டி, லட்சதீப பெருவிழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. தேவிகாபுரம் ஊராட்சியில் ஆத்துரை செ... மேலும் பார்க்க

பேருந்தில் பெண்ணிடம் தங்க நகைகள் திருட்டு

செய்யாறு பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏறிய பெண்ணிடம் இருந்து தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். காஞ்சிபுரம் வட்டம், புஞ்சை அரசன் தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் வெல்டிங் தொழிலாளி பாரதி. இவ... மேலும் பார்க்க

வேட்டவலம் ஸ்ரீசம்பந்த விநாயகா் கோயிலில் லட்ச தீப விழா

வேட்டவலம் ஸ்ரீசம்பந்த விநாயகா் கோயிலில் நடைபெற்ற 68-ஆவது ஆண்டு லட்சதீப விழாவில், பல ஆயிரம் பக்தா்கள் கலந்து கொண்டனா். இந்த விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. திங்கள்கிழமை காலை 11 மணிக்கு சுவாமிக்கு மகா... மேலும் பார்க்க

பள்ளியில் கேமரா, கணினி பாகங்கள் திருட்டு

செங்கம் அருகே அரசுப் பள்ளியில் கண்காணிப்புக் கேமரா மற்றும் கணினி உதிரிபாகங்கள் திருடப்பட்டன. செங்கத்தை அடுத்த காயம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளி 3 நாள்கள் விடுமுறைக்குப் பி... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன. வந்தவாசியை அடுத்த நெல்லியாங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் குளோரியா (60). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு இதே கிர... மேலும் பார்க்க