28% பெண் எம்.பி., எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆா் ஆய்வறிக்கையில் தகவல்
ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்து விஜய் உத்தரவு!
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்து அதன் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
”கட்சி விதிகளின்படி, தமிழக வெற்றிக் கழகத் தலைவரே, தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் ஆவார். இதன்படி, கட்சித் தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர்களை நியமிக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர் 1. என். ஆனந்த், பொதுச் செயலாளர்,
உறுப்பினர் 2. சி.விஜயலட்சுமி, மாநிலச் செயலாளர், உறுப்பினர் சேர்க்கை அணி.
இக்குழுவானது, கட்சியின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகளும் தோழர்களும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்களுக்கு எதிராகச் செயல்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை நடக்கப்படும்.
இக்குழுவிற்குக் கட்சி நிர்வாகிகளும் தோழர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.
நிர்வாக வசதிக்காகத் தமிழ்நாட்டில் உள்ள வருவாய் மாவட்டங்கள் வடக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மத்திய / கிழக்கு என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த நான்கு மண்டலங்களில் உள்ள வருவாய் மாவட்டங்களுக்குள்பட்ட கட்சி மாவட்டங்களுக்கு மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இந்த ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்கள் தங்களுக்குரிய மண்டலங்களில் கட்சி நிர்வாகிகளும் தோழர்களும் கழகக் கட்டுப்பாட்டை மீறி, கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்களுக்கு எதிராகச் செயல்பட்டால், அவர்கள் மீது கட்சி விதிகளின்படி உரிய நடவடிக்கைகளை, தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் வழிகாட்டுதல் மற்றும் அனுமதியின் பேரில் மேற்கொள்ளப்படும்” என்று தவெக தலைவர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிக்க: சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்: அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்!